ITR Mismatch: வரியை சேமிக்க தவறான தகவல்களை கொடுக்காதீங்க... டெக் முறையில் கண்காணிக்கும் IT!
Mismatch TDS & ITR Forms : வருமான வரி தாக்கல் படிவங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லை என்றால், வரி செலுத்துவோருக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
Income Tax Dept on Mismatch IT Returns: வருமான வரியைச் சேமிக்க 80சியின் கீழ் HRA என்னும் வீட்டு வாடகைக்கான கொடுப்பனவு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் கடன் மற்றும் வரி சேமிப்பு முதலீடுகள் தொடர்பான தகவல்களை கொடுத்து முறைகேடு செய்பவர்கள் இனி தப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் வரி ஏய்ப்பை கண்டறிய வருமான வரித்துறை டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. டிடிஎஸ் மற்றும் ஐடிஆர் படிவங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் பொருந்தாதவற்றைக் கண்டறிய வருமான வரித்துறை ஒரு சிறப்பு நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டிசம்பரில், மும்பை, டெல்லி மற்றும் பிற பெரிய நகரங்களில் உள்ள பல நிறுவனங்களுக்கு பிரிவு 133C இன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த பிரிவு 2014-15ல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ், வருமான வரித்துறை விவரங்களை சரிபார்க்க நோட்டீஸ் அனுப்பலாம். கொடுக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்த அல்லது திருத்த அறிக்கையை வழங்குமாறு நிறுவனங்கள் கேட்கப்படுகின்றன.
133C சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை
வரி ஏய்ப்பு செய்யப்பட்ட வழக்குகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று வருமானத்துறை அதிகாரிகள் (Income Tax) கூறியதாக ஆதாரங்கள் தெரிவித்தன. இந்தச் சமயங்களில், நிறுவனங்கள் குறைவான TDS தொகையை கழித்திருக்கலாம் அல்லது கூடுதல் முதலீடுகள் குறித்த ஆவணங்களை அளிப்பதன் மூலம் ஊழியர்கள் வரியாக பிடித்தம் செய்த பணத்தைத் திரும்பப் பெறும் சம்பவங்கள் நடந்துள்ளது. பணியாளர்கள் இந்தத் தகவலை முன்னர் கொடுக்காமல் இருந்த நிலையில், ஆனால் ஐடிஆர் நிரப்பும் போது தகவலை சேர்த்து பணத்தை திரும்ப பெறுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 133C சட்ட பிரிவு இதுவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக இந்த பிரிவின் கீழ் பல நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது வரி வாரியான சரிபார்ப்புக்கு வழி வகுக்கும். இது தொழில்நுட்பத்தின் புத்திசாலித்தனமான பயன்பாடு. இது மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சரிபார்ப்பதால் முடியாது என்பது வருமான துறைக்கு நன்றாகவே தெரியும் என்பதால், தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க | Income Tax: சம்பளத்தில் ‘இந்த’ அலவென்ஸ்களுக்கு வரியே கிடையாது..!
தவறான கிளைம்கள் எவ்வாறு கண்டறியப்படும்?
சட்டத்தின்படி, TDS ஐ சரியாக கணக்கிடுவது நிறுவனத்தின் பொறுப்பாகும். ஆனால் நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்தாததால் ஊழியர்களின் அறிவிப்பு சரியானது என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், ஊழியர்களால் உண்மையான ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாது. இந்நிலையில் தவறான உரிமைகோரல்களைக் கண்டறிய தொழில்நுட்பம் ஒரு சிறந்த கருவியாகும் என்றார். TDS தவறாக கழிக்கப்பட்டது தொடர்பாக நோட்டீஸைப் பெற்ற நிறுவனங்கள் அதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததற்கு அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
வருமான வரித்துறையினரால், கவனிக்கப்படும் முறைகேடுகள்
ஒரு ஊழியர் போலி உரிமைகோரல்களைச் செய்தால், நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொண்டால், வருமான வரி தொடர்பாக அலுவலக அமைப்பில் உள்ள இந்த குறைபாடு காரணமாக நிறுவனங்கள் ஊழியர் வழங்கிய தவறான தகவலை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆனால் இரண்டு வகையான தகவல்களுக்கு இடையிலான வேறுபாடு மற்றும் பொருத்தமின்மை உடனடியாக வருமான வரித்துறையினரால், கவனிக்கப்படுகிறது. இந்த விவகாரம் வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அனைத்து ஊழியர்களின் பதிவுகளையும் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. தவறான உரிமைகோரல்களின் அடிப்படையில் பணத்தைத் திரும்பப்பெறும் வழக்குகளைக் கண்டறிவதே இதன் நோக்கம். இதன் மூலம், நிறுவனங்கள் எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் மற்றும் ஊழியர்களின் கிளைம்களை முழுமையாக விசாரிக்கும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ