உலகம் முழுவதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு அதிகரித்துவிட்டது, இந்தியாவில் இப்போது பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.  டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் பலரும் இன்னும் தங்கள் வீடுகளில் பணத்தை வைத்திருக்கும் பாரம்பரிய முறைகளை பின்பற்றி தான் வருகின்றனர்.  ஒரு வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதில் வரம்புகள் உள்ளது, வருமான வரிச் சட்டம் வீட்டில் எவ்வளவு பணம் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்று வரம்பு விதிக்கவில்லை, இருப்பினும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினால், அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரத்தை  சமர்ப்பிக்க வேண்டும்.  வருமானத்தில் கணக்கில் வராத பணம் இருக்கக் கூடாது மற்றும் வீட்டில் வைத்திருக்கும் பணத்திற்கு ஆவணங்கள் பொருந்தவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நபருக்கு அபராதம் விதிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!


கணக்கில் காட்டப்படாத பணத்தை வருமான வரிப் அதிகாரிகள் சில சமயங்களில் கைப்பற்ற நேரிடும், இதுதவிர மொத்தப் பணத்தில் 137 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.  எந்த ஒரு நபரும் ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ரொக்கத்தை கடன் அல்லது டெபாசிட்டுக்கு ஏற்க அனுமதிக்கப்படுவதில்லை, இந்த விதி ஒரு நபரின் அசையா சொத்து பரிமாற்றத்திற்கும் பொருந்தும்.  ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகள் கணக்கில் காட்டப்படாமல் மற்றும் ஆதாரம் இல்லாமல் இருந்தால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும்.  ஒரே நேரத்தில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்யும்போது அல்லது எடுக்கும்போது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  கணக்கு வைத்திருப்பவர் ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தால் அவர்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்க வேண்டும்.


இந்திய குடிமகனாகிய எவரும் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் சொத்துக்களை விற்கும்பொழுதோ அல்லது வாங்கும்போதோ பணமாக செலுத்தினால் அல்லது பெறப்பட்டால் அவர்கள் விசாரணை அமைப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.  ஒரு கார்டுதாரர் தனது கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே பரிவர்த்தனையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டினால் அவர் மீது  விசாரணை பாயும்.  மேலும் ஒரே நாளில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சுமார் ரூ.2 லட்சம் ரொக்கமாக பெற முடியாது, வேணுமென்றால் வங்கியின் பரிவர்த்தனை மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ