ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையை சீர்திருத்த ஒரு குழுவை அமைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார், இது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து வந்துள்ளது.
ஓய்வூதிய திட்டம்
நிதி மசோதா 2023 இன் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்தின் போது மக்களவையில் பேசிய சீதாராமன், நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்தக் குழு, ஊழியர்களின் தேவைகளுக்கும், நிதி விவேகத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும். மேலும் பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஓய்வூதிய பிரச்னை குறித்து ஆராய நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
சாதாரண குடிமக்களின் பாதுகாப்பிற்காக நிதி விவேகத்தைப் பேணுவதுடன் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அணுகுமுறை உருவாக்கப்பட்டு வருவதாக சீதாராமன் கூறினார். இந்த அணுகுமுறை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும். அதே நேரத்தில், இந்த அறிவிப்பை ஆளும் கட்சி வரவேற்றுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டமும் புதிய ஓய்வூதியத் திட்டமும் இன்று நிறைய தலைப்புச் செய்திகளில் உள்ளன. 2004ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத் தொகை முழுவதும் அரசு மூலம் வழங்கப்படுகிறது. பணிபுரியும் காலத்தில் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியத் தொகை கழிக்கப்படுவதில்லை. ஆனால், 2004ல், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு தேசிய ஓய்வூதிய முறையைத் தொடங்கியது.
மேலும் படிக்க | திருமணமான பெண்களுக்கு ஜாக்பாட், இனி உங்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ