டிஜிட்டல் இந்தியாவில், இப்போது டிஜிட்டல் பேமெண்ட் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பணப் பரிவர்த்தனை செய்வதை சிலர் இன்னும் எளிதானகவும் சிறப்பானதாகவும் கருதுகின்றனர். இன்னும் சிலர் வருமான வரித்துறையின் பார்வையில் இருந்து விலகி இருக்க விரும்புவதாலும் பண பரிவர்த்தனைகளையும் செய்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நீங்கள் ரொக்க பணம் மூலம் சிறிய ஷாப்பிங் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், சில விஷயங்களில் ரொக்கம் பண பரிவர்த்தனை உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வருவதாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள  5  விதமான அதிக மதிப்புள்ள ரொக்க பண பரிவர்த்தனைகள் தொடர்பாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தால், உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தல்-


மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். இப்போது நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் விளக்கம் கேட்கலாம்.


நிலையான வைப்புத்தொகையில் பணத்தை டெபாசிட் செய்தல்


ஒரு நிதியாண்டில் ரொக்கமாக ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது குறித்து கேள்விகள் எழுவது போல், எஃப்.டி கணக்கில் ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃப்டிகளில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தாலும், சிக்கல் வரலாம்.  ஏதேனும் சந்தேகம் இருந்தால், வருமான வரித் துறை உங்களிடம் பணம் வந்ததற்கான தகவல்களை அறிய கேள்விகள் கேட்கலாம்.


மேலும் படிக்க | வீட்டில் இதற்கு மேல் பணம் இருந்தால் 137% அபராதம்: வருமான வரி விதியை தெரிந்துகொள்ளுங்கள்


பெரிய அளவிலான சொத்து பரிவர்த்தனை


சொத்து வாங்கும் போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்திருந்தால், சொத்து பதிவாளர் கண்டிப்பாக இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்பார். இத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய அளவில் பணம் பரிவர்த்தனை காரணமாக, நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை கேட்கலாம்.


கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்


உங்கள் கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அதை நீங்கள் பணமாக செலுத்தினால், பணத்தின் ஆதாரம் குறித்து உங்களிடம் கேட்கப்படலாம். அதே சமயம், எந்த ஒரு நிதியாண்டிலும் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்தினால், உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என வருமான வரித்துறை கேள்வி கேட்கலாம்.


பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களை வாங்குதல்


பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால், இது குறித்து வருமான வரித் துறை விளக்கங்களை கேட்கலாம். ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதன் தகவல் வருமான வரித்துறைக்கு சென்றடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம்.


 


மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ