ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2024, 12:00 PM IST
  • முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஓய்வு.
  • இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
  • வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட விருப்பம்.
ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்! title=

உத்திர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான வேக பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு அறிவித்துள்ளார். இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். சமீபத்தில் ரஞ்சித் டிராபி தொடரில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடினார் அங்கித் ராஜ்பூத். இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டில் தொடரில் விளையாட தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்பு  2012 U19 உலகக் கோப்பை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த் இதே போல இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் விளையாடி வருகிறார்.

மேலும் படிக்க | சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!

2016 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி டிராபியில் 14.21 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரபலமடைந்தார் அங்கித் ராஜ்பூத். அதன் பிறகு 2013 மற்றும் 2014 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் 31 வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், நான் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். 2009-2024 வரையிலான எனது கிரிக்கெட் பயணம் மிக அற்புதமான காலகட்டம். இந்திய கட்டுப்பாட்டு வாரியம், உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம், கான்பூர் கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங், கொல்கத்தா நைட் ரைடர், கிங்ஸ் 11, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என எனக்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிந்து கொள்கிறேன். பயிற்சியாளர்கள், பிசியோ, எனது பயிற்சியாளர் ஷஷி மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நன்றி. உங்கள் அனைவருடனும் விளையாடிய பாக்கியம்எனது கனவை நனவாக்க உதவியது.

அனைத்து ஏற்ற தாழ்வுகளில் என்னை ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும், உங்கள் அனைவருடனும் நான் செலவிட்ட தருணங்களையும், உங்கள் ஆதரவையும் என்றென்றும் போற்றுவேன். எனது வாழ்க்கை முழுவதும் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவிற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அவர்கள் இல்லாமல் என்னால் சாதிக்க முடியாது. கிரிக்கட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் புதிய வாய்ப்புகளை நான் ஆராய்வேன் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், புதிய மற்றும் வித்தியாசமான சூழலில் எனக்கு சவாலாக இருப்பேன். ஒரு கிரிக்கெட் வீரராக இது எனது பயணத்தின் அடுத்த படியாகும், மேலும் எனது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி - இனி மீள வழி இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News