Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்
Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
Income Tax Saving Tips: 2023-2024 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-2025) தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும். பிரபலமான பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD(1) ஆகிய பிரிவுகளுடன் இணைந்து ரூ.1.5 லட்சம் என்ற அதிகபட்ச விலக்கு வரம்பை வழங்குகிறது. மேலும் இன்னும் பல பிரிவுகள் வரி விலக்குகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன.
Section 80C -ஐத் தவிர வரியை சேமிக்க உதவும் பிற பிரிவுகளை பற்றி இங்கே காணலாம்
1. Section 80D: ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள்
வரி செலுத்துவோர், தங்களுக்கும், தங்கள் மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியம்களுக்காக ரூ.25,000 வரை விலக்குகளைப் பெறலாம். இது தவிர 60 வயதிற்குட்பட்ட பெற்றோருக்கு கூடுதலாக ரூ.25,000 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வரை வரி விலக்கை கோரலாம்.
2. Section 80DD: ஊனமுற்றோருக்கான செலவுகள்.
80% வரை ஊனமுற்றவர்களுக்கு வரி விலக்காக ரூ.75,000 மற்றும் கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.1.25 லட்சம் கிடைக்கிறது.
3. Section 80E: கல்விக் கடன் வட்டி செலுத்துதல்
உயர்கல்விக்கான கடனுக்கான வட்டிக்கு வரம்பு விலக்கு அளிக்கப்படும். இது மேம்பட்ட படிப்புகளுக்கு நிதியளிப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது.
4. Section 80EE: முதல் முறையாக வீட்டை சொந்தமாக்கும் உரிமையாளர்களுக்கான வீட்டுக் கடன் வட்டி
வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழ் ரூ.2 லட்சம் வரம்பைத் தவிர, வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு கோரலாம்.
5. Section 80G: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள்
தேசிய பாதுகாப்பு நிதி மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கான பங்களிப்புகள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகள் 50% அல்லது 100% விலக்குகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு
6. Section 80GG: HRA இல்லாமல் பணியாளர்கள் செலுத்தும் வாடகை
இந்தப் பிரிவின் கீழ், மொத்த வருவாயில் 25%, மாதத்திற்கு ரூ.5,000 அல்லது மொத்த வருவாயில் 10%க்கு மேல் செலுத்தப்படும் வாடகை, இவற்றில் எது குறைவோ அதில் விலக்கு அளிக்கப்படுகின்றது.
7.Section 80TTA: சேமிப்பு கணக்கு வட்டி
வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் வைத்திருக்கும் கணக்குகளுக்கு சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கும் வட்டி ரூ.10,000 வரை விலக்கு உள்ளது.
8. Section 80U: ஊனமுற்ற வரி செலுத்துவோருக்கான விலக்கு
வரி செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 மற்றும் கடுமையான குறைபாடுள்ளவர்களுக்கு ரூ.1.25 லட்சம் நிலையான விலக்கு கிடைக்கும்.
9. Section 80DDB: குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை
குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக வரி செலுத்துவோர் ரூ.40,000 வரை விலக்கு கோரலாம். மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு இந்த வரம்பு ரூ.1 லட்சமாக உயரும்.
10. Sections 80GGB and 80GGC: அரசியல் கட்சிகளுக்கான பங்களிப்புகள்
அரசியல் கட்சிகளுக்கு முறையே நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செய்த பங்களிப்புகளுக்கு விலக்குகள் கிடைக்கும்.
வரி சேமிப்புகளை மேம்படுத்துதல்
இந்த பிரிவுகளை மூலோபாயமாகப் பயன்படுத்துவதன் மூலம், வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குரிய வருமானத்தை கணிசமாகக் குறைத்து, தங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும். இந்த விதிகள், பிரபலமான பிரிவு 80C உடன் இணைந்து, வரிச் சலுகைகளை அதிகரிக்க ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் இந்த வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்துவதை உறுதிசெய்ய நிதி நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ