2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!

2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2024, 03:20 PM IST
  • 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளது
  • ரிசர்வ் வங்க்யின் அதிர்ச்சித் தகவல்
  • 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே?
2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்! title=

நியூடெல்லி: 2000 ரூபாய் கரன்சி நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் கணிசமான அளவு இன்னும் மக்களிடமே இருப்பதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை மட்டுமல்ல பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக கூறும் ஆர்பிஐ, 7,581 கோடி ரூபாய் (2.1 சதவீதம்) அளவிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்திய ரூபாய் நோட்டுக்களில் ரூ.1000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி (RBI)  2016 நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, 2000 ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால் கவலையை விடுங்க: PF கணக்கில் ஈசியா எடுக்கலாம்

பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்துவதன் நோக்கமாக இருந்தது. இருப்பினும், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. அதன்பிறகு, மே 19, 2023 அன்று மீண்டும் ரூபாய் நோட்டு தொடர்பாக அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து விலக்கப்படுவதாகவும், அவற்றை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி (சுமார் $42.6 பில்லியன்) ஆகும். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30, 2023 வரை ரிசர்வ் வங்கி முதலில் காலக்கெடு விதித்தது.

மேலும் படிக்க | ஹிண்டன்பர்க்கிற்கு செபி நோட்டீஸ் எதிரொலி! ஆர்டிஐ தாக்கல் செய்ய தயாராகும் ஹிண்டன்பர்க்!

இந்த காலக்கெடு பின்னர் அக்டோபர் 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. காலகெடு நீட்டிக்கப்பட்ட போதிலும், அதிக மதிப்புள்ள நோட்டுகளில் கணிசமான பகுதி வங்கி முறைக்குத் திரும்பவில்லை. 

தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம் என்றும், 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய தபால் மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

2000 ரூபாய் நோட்டு வாபஸ் என்பது ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" ஒரு பகுதியாகும், இது பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க | 80000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்! பட்ஜெட்டுக்கு முன்னர் வேகம் பிடிக்கும் பங்குச்சந்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News