ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழை (Life certificate) வழங்கவில்லை என்றால், ஓய்வூதியம் (Pension)  நிறுத்தப்பட்டு விடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயுள் சான்றிதழை ஆஃப்லைனில் சமர்ப்பிக்க வேண்டும், அதாவது, வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று தங்களை நிரூபிக்க வேண்டும் மற்றும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இப்போது EPFO ​​மூத்த குடிமக்கள் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்க அனுமதி அளித்துள்ளது, இதனால் அவர்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு வேண்டியதில்லை. 


இருப்பினும், பெரும்பாலான மூத்த குடிமக்கள் தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதோடு, பலர் அதிலிருந்து விலகியே இருக்கின்றனர். பல வயதானவர்களுக்கு ஸ்மார்ட்போனை இயக்குவது கூட தெரியாது. இத்தகைய சூழ்நிலையில், ஆன்லைன் சான்றிதழை நிரப்புவதும் சமர்ப்பிப்பதும் சற்று கடினம்.


வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ள வயதானவர்களுக்கு, அத்தகைய பென்ஷன்தாரர்களுக்கு, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (India Post Payments Bank -IPPB)  உங்கள் வீட்டிற்கே வந்து,  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை (Digital Life Certificate - DLC) வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது. 


ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!


இந்த சேவை வழங்கப்படும் முறை
1. இந்த சேவையின் கீழ், உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் (Post Office)  தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வருவார்.
2. தபால்காரரிடம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் இருக்கும்.
3. போஸ்ட்மேன் உங்கள் வீட்டிலேயே டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்டை வழங்கும் செயல்முறையை முடித்துக் கொடுப்பார்


இதற்கு தேவையான ஆவணங்கள்
1. ஓய்வூதிய ஐடி ( Pension ID) 
2. ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை (Pension Payment order - PPO)
3. ஓய்வூதிய வழங்கும் நிறுவனத்துடன் செய்துள்ள ஆதார் பதிவு
4. வங்கி கணக்கு விவரங்கள்
5. ஆதார் எண்
6. மொபைல் எண்


ஸ்கேனிங் இயந்திரம் மூலம் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்டை (Digital Life Certificate)  வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டு, உடனடியாக டிஜிட்டல் லைஃப் சர்பிகேட் உருவாக்கப்பட்டு, லைப் ப்ரூப் ஐடி உடனடியாக உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மேலும், ஓய்வூதியதாரரின் சான்றிதழ் குறித்த தகவல்கள் தானாகவே ஓய்வூதியத் துறையில் பதிவேற்றப்படும். அதாவது, ஓய்வூதியம் பெறுபவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை.


இதற்கான கட்டணம்
பென்ஷன் வாங்குபவர் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்டை வசதியைப் பெற விரும்பினால், அதற்காக 70 ரூபாயை மட்டுமே செலவிட வேண்டும், அதில் அனைத்து வரிகளும் அடங்கும்.


ALSO READ |  ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..!!!