புதுடெல்லி: 18 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா ஜூன் மாதத்தில் 790 மில்லியன் டாலர் வர்த்தக உபரியை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் நலிவுற்ற நிலையில் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் பிற தொழில்துறை பொருட்களுக்கான உள்நாட்டு தேவையை குறைத்து, பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதத்திலிருந்து உலக அளவிலான வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன.  அது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலும் பிரதிபலிக்கிறது.  இதைத்தவிர, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன. சர்வதேச அளவில் தேவைகள் குறைவதும், விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகளால் அடுத்த சில காலாண்டுகளில் வர்த்தகம் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  


ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா இந்த நிதியாண்டில் 5% வரை குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் தொடங்கிய இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு தொடர்பான அரசின் முந்தைய மதிப்பீடுகள் தலைகீழாக மாறிவிட்டன.  COVID-19 பாதிப்பினால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த லாக்டவுனால் நுகர்வோரின் தேவைகள் குறைந்து பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  


Read Also | முகேஷ் ஜி-யின் 5ஜி: சொந்த 5G-ஐ கொண்டு வரவுள்ளது முகேஷ் அம்பானியின் Reliance Jio


ஜூன் மாதத்தில் இறக்குமதி 47.59% ஆக குறைந்து 21.11 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் ஏற்றுமதி 12.41% குறைந்து 21.91 பில்லியன் டாலராக இருந்தது, இது சிறிய அளவிலான வர்த்தக உபரிக்கு (trade surplus) வழிவகுத்தது என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


2002 ஜனவரி மாதத்தில்,இந்தியா கடைசியாக 10 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தக உபரியை அதிவு செய்திருந்தது என்று Refinitiv data கூறுகிறது.


இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய், ஒரு சிறிய வர்த்தக உபரி "நல்ல செய்தி" என்று கூறுகிறார்.


"இருப்பினும், லாக்டவுன், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் மந்தநிலை ஆகியவை உள்நாட்டு பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு இறக்குமதி வீழ்ச்சிக்கு பங்களித்தன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது" என்று அஜய் சஹாய் தெரிவித்தார். மேலும் ஏற்றுமதியாளர்கள், தங்கள் மூலப்பொருட்களுக்கான இறக்குமதியை குறைத்திருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.


Read Also | ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மலிவான 5G தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது


பிரதமர் நரேந்திர மோடி இறக்குமதிக்கான மாற்று பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற தொழில்துறையினர் அழுத்தத்தை அவர் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.


ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதி கடுமையாக சரிந்துள்ளது.