புதுடெல்லி: நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான Infosys, ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,272 ரூபாய் கோடி லாபம் ஈட்டியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 3,802 கோடி ரூபாய் என்று அந்த நிறுவனம் பங்குச்சந்தைக்கு (BSE) அளிக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மறுஆய்வு செய்யப்பட்ட காலாண்டில் அதன் வருவாய் 8.5 சதவீதம் அதிகரித்து 23,665 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 21,803 கோடி ரூபாயாக இருந்தது.


உலகளவில், COVID-19 தொற்றுநோயால் வணிகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன, கோடிக்கணகானவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓரளவு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், தற்போது நிலைமை சுதாரிக்கப்பட்டு விட்டதான நம்பிக்கை தற்போது தென்படுகிறது.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கத்தால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பணிகள் முடங்கின. இருந்தாலும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் தெரிவை மேற்கொண்டு, தங்கள் இலக்கை பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் அடைந்துள்ளன.


கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் எழுப்பியுள்ள முடக்கத்தில் இருந்து நிவாரனம் தந்து, தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.  


இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது 2020-21 நிதியாண்டில் நிலையான நாணய அடிப்படையில் 2 சதவீதம் வரை வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.


Also Read | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?


வழக்கமாக ஏப்ரல் மாதத்தில், COVID-19 பரவியதால், உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் கணிப்பை வழங்காமல் இருந்தது இன்ஃபோசிஸ். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.


"முதல் காலாண்டு கொடுத்திருக்கும் ஊக்கத்தால், எஞ்சியிருக்கும் நடப்பு நிதியாண்டின் பிற காலாண்டுகளிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று உத்வேகம் ஏற்பட்டுள்ளது" என்று இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சலீல் பரேக் கூறினார்.