RIL Quick Commerce Plan : முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வணிக சாம்ராஜ்யத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். அண்மையில் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) பல முக்கியமான கையகப்படுத்துதல்களை நிறைவு செய்தது. அதற்கு அடுத்தபடியாக நிலையன்ஸ் குழுமம், இப்போது மளிகைப் பொருட்களை விரைவாக வழங்கும் நிறுவனமாக மாறவிருக்கிறது.  ரிலையன்ஸ் ரீடெய்லின் ஜியோமார்ட் இந்த சேவையை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 நிமிடங்களுக்குள் டெலிவரி 


ம்ளிகை பொருட்கள் உட்பட வீட்டுக்குத் தேவையான பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை நிறுவனம் தொடங்கும் ஜியோமார்ட், முதலில் முக்கியமான ஏழு முதல் எட்டு நகரங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடும். பின்னர், நிறுவனம் படிப்படியாக 1000க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் (JioMart Express) என்ற பெயரில் 90 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவையை ரிலையன்ஸ் செய்துவந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்திய நிலையில், தற்போது 30 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் நிறுவனம் மீண்டும் விநியோகத் துறையில் நுழைகிறது.  


மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு துறையில் கால்பதிக்க தயாராகும் LIC... வெளியான முக்கிய தகவல்..!!


வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் வீட்டு விநியோக நிறுவனங்களின் பிரிவில் சேவை செய்ய திட்டமிட்டுள்ள நேரத்தில் ரிலையன்சும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. தற்போது Blinkit, Swiggy மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் 10-15 நிமிடங்களுக்குள் மளிகை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை ஆர்டர்ன் பேரில் டெலிவரி செய்கின்றன.


ஆனால், ஜியோமார்ட் செயல்படுவதற்கும், தற்போது களத்தில் இருக்கும் நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கும். ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற ஜியோமார்ட் கிடங்குகளைப் பயன்படுத்தாது என்று தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனக் கடைகள் மற்றும் ஸ்டோர்களின் நெட்வொர்க் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யப்படும்.


வீட்டுப்பொருள் விநியோகப்பிரிவில் Blinkit
ரிலையன்ஸின் இந்த நடவடிக்கையால், மளிகைப் பொருட்களை விரைவாக ஹோம் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி மேலும் தீவிரமடையும். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பு, நாடு தழுவிய நெட்வொர்க், அதன் பலம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.


தற்போது Blinkit சுமார் 40-45% சந்தைப் பங்குடன் இந்தப் பிரிவில் முன்னணியில் உள்ளது. 2024 நிதியாண்டில் ஆன்லைன் மளிகைச் சந்தை சுமார் $11 பில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதி அளவு, குயிக் டெலிவரி என்ற துரிதமாக விநியோகம் செய்யும் பிரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தற்போது வீடுகளில் டெலிவரி செய்யும் துறையில் அதிகரிக்கும் போட்டியால், மக்கள் கடைகளுக்கு சென்று பொருள் வாங்குவது குறையும் என்றும், இது சிறு குறு வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ