கொரொனா காரணமாக ஆறில் ஒரு இளைஞருக்கு வேலை இல்லை. அதிர்ச்சி அளிக்கும் ILO அறிக்கை
COVID-19 காரணமாக இளைஞர்களில் ஆறில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாக ஐ. எல். ஓ (ILO )தகவல். இந்த தொற்றுநோய் பரவல் இளைஞர்களுக்கு மூன்று மடங்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜெனீவா: COVID-19 காரணமாக இளைஞர்களில் ஆறில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாக ஐ.எல்.ஓ (ILO) அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதாவது இன்று (மே 28) ஆம் தேதி IANS ஊடகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், கோவிட் -19 தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து உலக அளவில் இளைஞர்களில் ஆறில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அதே நேரத்தில் பணியில் இருப்பவர்கள் 23 சதவீதம் குறைவாக வேலை செய்கின்றனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) தனது அறிக்கையில் கூறியுள்ளது என ஐஏஎன்எஸ் ஊடகம் மேற்கோள்காட்டி உள்ளது.
புதன்கிழமை ஐ.எல்.ஓ மானிட்டர் வெளியிட்ட அறிக்கையில், "கோவிட் -19 (COVID-19) மற்றும் உலக வேலை நிலவரம்" என்ற தலைப்பின் 4வது பதிப்பில், தெரிவித்த தகவல் படி, தொற்றுநோயால் இளைஞர்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பிப்ரவரி மாதம் முதலே, இளைஞர்களுக்கு வேலையின்மை என்பது கணிசமாகவும் விரைவாகவும் அதிகரித்து வந்துள்ளது. மேலும் இது இளைஞர்களை விட அதிகமாக இளம் பெண்களை பாதித்துள்ளது என்று சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவல் இளைஞர்களுக்கு மூன்று மடங்கு அதிர்ச்சியை தந்துள்ளது.இது அவர்களின் வேலை இழப்பை (Jobs) ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளையும் சீர்குலைத்துள்ளது.மேலும் தொழிலாளர் சந்தையில் நுழையவோ அல்லது வேலை வாய்ப்பை தேடவோ முற்படுபவர்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்தி படிக்க: வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி; 1 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்
2019 ல் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 13.6 சதவீதமாக இருந்தது. இது வேறு எந்த பிரிவையும் விட அதிகமானது. உலகளவில் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் ஈடுபடாத சுமார் 267 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
"அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு நாம் குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், வைரஸின் தாக்கம் பல தசாப்தங்களாக நம்மிடையே நீடிக்க கூடும்" என்று ஐ.எல்.ஓ இயக்குநர்ஜெனரல் கை ரைடர் கூறினார்.
மேலும் செய்தி படிக்க: ஏப்ரல் மாதத்தில் மட்டும் 30 மில்லியன் பேர் வேலை இழந்தனர். அதில் 86% ஆண்கள்..
"அவர்களின் திறமை மற்றும் ஆற்றல்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாமல் வாய்ப்பின்மையால் ஓரங்கட்டப்பட்டால், அது நம் எதிர்காலத்தை சேதப்படுத்தும், மேலும் கோவிட்க்கு பிந்தைய பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பானதாக உருவாக்குவது மிகவும் கடினம்."
வளர்ந்த நாடுகளில் பரந்த நிலையிலான வேலைவாய்ப்பு (Jobs) மற்றும் பயிற்சி உத்தரவாத திட்டங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமான பொருளாதார பிரிவுகளில் வேலைவாய்ப்பு தரும் தீவிரமான முக்கிய திட்டங்கள் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவை அவசியம் என்று கூறியுள்ளார். சர்வதேச தொழிலாளர் நிதியத்தின் (ILO) இந்த அறிக்கை, இளைஞர்களை ஆதரிப்பதற்கான அவசர, பெரிய அளவிலான மற்றும் இலக்கு கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
(மொழியாக்கம்.-வானதி கிரிராஜ்)