'சிறுதுளி பெருவெள்ளம்' என்பது போல சிறுக சிறுக சேமித்தால் தான் பெரிய தொகையை நாம் பெற முடியும்.  வீட்டில் நாம் சேமித்து வைக்கும்பொழுது எவ்வளவு பணம் சேமித்து வைக்கிறோமோ அவ்வளவு தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும். அதேசமயம் ஏதேனும் முதலீட்டு திட்டங்களில் நாம் பணத்தை முதலீடு செய்யும்போது நமக்கு நாம் முதலீடு செய்த பணத்துடன் சேர்த்து அதற்கான வட்டியும் என ஒரு பெரிய தொகையே கிடைக்கும்.  ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதா, நமது பணத்திற்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடுமா என்பதை ஆராய்ந்து முதலீடு செய்வது முக்கியம்.  பங்கு சந்தையில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதாக கருதப்பட்டாலும், அதில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் நமக்கு எதிர்பார்த்த தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.  அதுவே அரசின் கீழ் இயங்கும் போஸ்ட் ஆஃபிசின் திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!!  


போஸ்ட் ஆஃபீசின் ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் முதலீடு செய்யும்பொழுது உங்கள் பணத்திற்கு சிறந்த வட்டி விகிதம் கிடைக்கிறது.  இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் டெபாசிட் செய்யலாம், இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.  இந்த கணக்கின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், இருப்பினும் வங்கி 6 மாதங்கள், 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என தொடர் வைப்பு கணக்கு வசதியை வழங்குகின்றன.  இதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வட்டி ஒவ்வொரு  காலாண்டின் முடிவிலும் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.


போஸ்ட் ஆஃபிஸின் இந்த ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு நிறுவனம் 5.8% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆஃபிஸின் இந்த ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் ரூ.7,174 என ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு 5.8% வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.  இந்திய அரசு அதன் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிக்கிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ