7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!!

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரி நேரத்தில் மிகப்பெரிய பரிசு காத்துக்கொண்டு இருக்கிறது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு இந்த நேரத்தில் வரக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2022, 10:49 AM IST
  • அகவிலைப்படி உயர்வின் அடுத்த சுற்றுக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
  • அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • 2022 இன் இரண்டாவது டிஏ உயர்வாகும் இது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! title=

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி: அகவிலைப்படி (டிஏ) உயர்வின் அடுத்த சுற்றுக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை கணிசமான டிஏ உயர்வால் பயனடைவார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இந்த முறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4 சதவீத உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. இருப்பினும், இந்த எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு இதுவரை எதுவும் வரவில்லை.

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீத டிஏ பெறுகிறார்கள். கணிக்கப்பட்ட எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டால் இது 38 சதவீதமாக உயரும். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 இன் இரண்டாவது டிஏ உயர்வு: தொகை மற்றும் அறிவிப்பு

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவு, டிஏ அதிகரிப்பின் அளவை தீர்மானிக்கும் முக்கிய அளவுருவாகும். இதன் அடிப்படையில் அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 2023 ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு 

இந்த ஆண்டு ஏப்ரலில், ஏஐசிபிஐ தரவு 1.7 புள்ளிகள் உயர்ந்து 127.7 ஐ எட்டியது. பின்னர் மே மாதத்தில் 1.3 புள்ளிகள் அதிகரிப்புடன் 129 ஐ எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 129.2 ஆகவும், ஜூலையில் 129.9 ஆகவும் உயர்ந்தது.

இந்த மாதம் எதிர்பார்க்கப்படும் டிஏ அறிவிப்பு, மார்ச் மாதம் முதல் சுற்று உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, ஆண்டின் இரண்டாவது அறிவிப்பாக இருக்கும். ஏஐசிபிஐயின் எண்ணிக்கை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் தொடர்ச்சியாக குறைந்தது. பின்னர் மார்ச் மாதத்தில் ஒரு உயர்வை பதிவு செய்தது. 

முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (ஜனவரி, 2022) 31 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையால் மத்திய அரசின் 1.16 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

அறிவிப்பு முன்னணியில், ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் உயர்வு அறிவிக்கப்படலாம் என்று முந்தைய அறிக்கைகள் பரிந்துரைத்திருந்தாலும், சமீபத்திய அறிக்கைகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு 2022 நவராத்திரி நேரத்தில் அறிவிப்பு வரும் என்று கூறுகின்றன.

18 மாத டிஏ நிலுவைத் தொகைக்கான கோரிக்கை

இதற்கிடையில், கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் முடக்கப்பட்ட காலத்திற்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய நல்ல செய்திக்காகவும் ஊழியர்கள் இந்த பண்டிகை காலத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்த மாதத்தின் துவக்கத்தில் வந்த அறிக்கைகளின்படி, ஊழியர்கள் தரப்பில் இருந்து அரியர் தொகை குறித்த விவகாரம் பிஎம்ஒ-க்கு வந்துள்ளது. இதில் நல்ல செய்தி விரைவில் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அனைவருகும் உள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எதிர்பார்க்கும் ஊழியர் தரப்பு, அதற்கான பணம் செலுத்தும் முறையைப் பற்றி விவாதிக்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR உயர்வு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News