சம்பாதிப்பது என்பது வாழ்க்கையில் வசதியாக வாழ்வதற்காகத்தான் என்பது பொதுவான ஒன்று. வருமானம் ஈட்டும்போது மட்டுமல்ல, சம்பாதிக்க முடியாத காலத்திலும் அதாவது பணி ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக திட்டமிடுவது அவசியமான ஒன்றாகும். எனவே ஓய்வூதியக் காலத்தில் வருமானத்திற்காக திட்டமிடல் என்பது முக்கியமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதியம் என்பது அரசு வேலையில் இருப்பவர்களுக்கு என்று இருந்த காலம் மாறிவிட்டது. அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதால், அரசு வேலை பார்ப்பவர்களுக்குத் தான் பெண் கொடுப்போம் என்றிருந்த காலம் மாறிவிட்டது என்றாலும், ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் அவசியமானது தான்.


ஓய்வூதியம் என்பதற்கான திட்டமிடலை இளம் வயதிலேயே தொடங்கிவிட்டாலே வயதான காலத்தில் மாத வருமானம் நிலையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், தற்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையாக முதலீடு செய்வது (SIP) என்பது மிகவும் பிரபலமான முதலீடாக உள்ளது (Investment Tips).


அனைவருக்கும் ஏற்ற முதலீடு SIP என்பதற்கான காரணங்கள் என்ன?


சீரான இடைவெளியில் நிலையான முதலீடு
சந்தை ஏற்ற இறக்கத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தைக் குறைக்கும் செலவின் சராசரி உத்தி
நெகிழ்வுத்தன்மை
கூட்டுத்தொகையின் சக்தி
பல துறைகளில் முதலீடு 
தொழில்முறை நிதி மேலாண்மை
பங்குச்சந்தையின் பலன்களை சுலபமாகப் பெறலாம்
ஆட்டோ டெபிட் வசதி 
பங்குச்சந்தை முதலீட்டை விட சிறந்தது 


மேலும் படிக்க | SIP: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!


முதலீடு செய்து, முதலீடு செய்த தொகையில் 12 சதவிகிதம் வருடாந்திர வருமானம் கொடுப்பது எஸ்.ஐ.பி என்பதால், இந்த சேமிப்பு, ஓய்வூதியக் காலத்தில் பெரிய கார்ப்ஸ் ஃபண்ட் உருவாக்கலாம். நீண்ட காலத்திற்கு SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஓய்வூதிய காலத்தில் நிலையான மாத வருமானத்தையும் பெறலாம்.


இதற்கு 5-5-5 என்ற ஃபார்முலா உதவுகிறது. SIP இன் 'டிரிபிள் 5' ஃபார்முலா என்பது, 5 ஆண்டுகள், 5%, 5 கோடி என்ற அடிப்படையில் இந்த கணக்கீட்டைப் பார்க்கலாம். 


SIP டிரிபிள் 5 சூத்திரம்


டிரிபிள் 5 சூத்திரத்தில் உள்ள மூன்று 5கள், இதிலுள்ள மூன்று 5களில், முதல் 5 என்பது பொதுவான ஓய்வூதிய வயதான 60 வயது என்பதை கணக்கில்க் கொண்டு, அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெறுவதை இலக்காகக் கொண்டு திட்டமிடுவது ஆகும். இரண்டாவது 5 என்பது, ஆண்டுதோறும் SIP முதலீட்டை 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது 5 என்பது 5 கோடி ரூபாய் 55 வயதில் என்ற இலக்கைக் கொண்டு திட்டமிடுவதைக் குறிக்கும்.
 
SIP இன் 'டிரிபிள் 5' ஃபார்முலா - 5 ஆண்டுகள், 5% மற்றும் ₹ 5 கோடி என்பது மிகப் பெரிய இலக்காக தோன்றலாம். ஆனால், ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கும்போதே மாதாமாதம் சேமிக்கத் தொடங்கிவிட்டால் இந்த இலக்கு மிகவும் சுலபமானதாக இருக்கும். ஆனால், வேலை செய்ய தொடங்கும்போதே யாராவது பணிஓய்வு பற்றி யோசிப்பார்களா என்ற கேள்வி எழலாம். ஆனால், சம்பாதிக்கத் தொடங்கும்போது இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால் உங்கள் ஓய்வுக்காலத்தில் 5 கோடி ரூபாய் என்ற இலக்கை நீங்கள் வைக்க முடியாது. இல்லாவிட்டால் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 


எனவே, ஒருவர் 25 வயதில் SIP திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொண்டு அதற்கான கணக்கீட்டைப் பார்ப்போம். மாதந்தோறும் 12000 ரூபாயை எஸ்ஐபியில் டெபாசிட் செய்ய தொடங்குவது 25 வயதில் என்றால், 55 வயது வரை அதாவது தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு செய்வீர்கள்.


கூட்டுத்தொகையின் பலனால் முதலீடு அதிகரித்துக் கொண்டே செல்லும். ஏற்கனவே இருக்கும் முதலீட்டின் பலனும் மீண்டும் முதலீடாக மாறுவதால் முதலீட்டுடன் சேர்த்து உங்கள் ஓய்வூதிய கார்பஸ் மதிப்பு மொத்தம் 5 கோடியைத் தாண்டி விடும். 


முதலீடு மற்றும் SIPயின் கூட்டுத்தொகை மூலம், 5 கோடி ரூபாய் சேமித்துவிட்டீர்கள். ஆனால், உங்கள் வயது அப்போது 55 தான். ஓய்வூதிய வயதான 60 வயதை அடையும் போது ஓய்வூதியம் எவ்வளவு, எப்படி கிடைக்கும் என்பதையும் திட்டமிடலாம். 55 வயதில் 5 கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துவிடுங்கள். ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை (FD) சிறந்ததாக இருக்கும். குறைந்தபட்சம் 6 சதவீத வட்டி என்று வைத்துக் கொண்டாலும், உங்கள் ஓய்வூதியம் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த நிலையில் மாதந்தோறும் உங்களுக்கு இரண்டரை லட்ச ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.  


மேலும் படிக்க | PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ