பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்வது உங்களுக்கு பாதுகாப்பான முறையில் ஓய்வு காலத்தில் வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு அற்புதமான முறையாகும்.  இது அரசாங்க ஆதரவு பெற்ற சிறு சேமிப்புத் திட்டமாகும், இது மிதமான வருமானத்தை அளிக்கிறது.  அதேசமயம் வரிச் சலுகைகள், வரி விலக்குகள் மற்றும் மூலதனப் பாதுகாப்பு போன்றவற்றை தருகிறது.  வரி இல்லாத வருமானத்தை உருவாக்கும் சில சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.  FY22-ன் முதல் காலாண்டில் இருந்து 7.1 சதவீதமாக இருக்கும் வட்டி மாறாமல் உள்ளது, இது பரஸ்பர நிதிகள் போன்ற பிற திட்டங்களால் வழங்கப்படும் வருமானத்தைப் போல லாபகரமானதாக இருக்காது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிபிஎஃப்-ல் மாதந்தோறும் ரூ.12,500 அல்லது ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து, 7.10% வருமானத்தை ஈட்டினால் முதலீட்டாளர் ரூ.1 கோடிக்கு மேல் கார்பஸை உருவாக்க முடியும்.  இந்த தொகையை மேலும் அதிகரிக்க முதலீட்டாளர்கள் விரும்பினால் முதலீட்டு காலத்தை 5 வருடங்களாக அதிகரிக்க வேண்டும்.  பிபிஎஃப் கணக்கை முதலீட்டாளர் 25 முதல் 30 வயதுக்குள் தொடங்கி, அதை 3 முறை 5 ஆண்டுகள் வரை நீட்டித்தால், ஓய்வு பெறுவதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கு முதலீட்டை எளிதாக அதிகரிக்கலாம்.  30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் முதலீட்டுத் தொகையானது ரூ. 1.54 கோடியை முதிர்வுத் தொகையாக மாற்றும், தற்போதைய வட்டி விகிதமான 7.1 சதவீதம் மாறாமல் இருக்கும்.  ரூ.1.54 கோடியில் ரூ.45 லட்சம் உங்கள் சொந்த முதலீடு, மீதமுள்ள ரூ.1.09 கோடி 30 ஆண்டு கால வட்டியாக கிடைக்கிறது. 



மேலும் படிக்க | விவசாயிகளே! ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இதை அப்டேட் செய்யுங்கள்


இந்தத் திட்டத்தின் ஒரு முறை அல்லது ஒரு வருடத்தில் 12 மாதங்கள் வரையில் முதலீடு செய்யலாம்.  இதன்  வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதம் மற்றும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.  ஒவ்வொரு நிதியாண்டுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகவும், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சமாகவும் இருக்கும்.  வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான டெபாசிட்கள் வருடாந்திர வரி விலக்குக்குத் தகுதி பெறுகின்றன.


மேலும் படிக்க | நகைக்கடன் வாங்கப்போறீங்களா? 5 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ