வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... பெண்களுக்கான 5 சிறந்த அஞ்சலக திட்டங்கள்
Post Office Investment Schemes: தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் பெண் முதலீட்டாளர்களுக்கு பல நல்ல திட்டங்கள் உள்ளன. இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பெண் முதலீட்டாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நல்ல வருமானத்தையும் தருகிறது.
Post office Investment Schemes: பாதுகாப்பான முதலீடு என்று வரும் போது, நம் மனதில் முதலில் தோன்றுவது, அரசு சார்ந்த திட்டங்கள், பொதுத்துறை வங்கிகள், அஞ்சலகத்தில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவைதான். இவற்றில் முதலீடு செய்வதால், நமது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, வருமானமும் சிறப்பாக கிடைக்கும். தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் பெண் முதலீட்டாளர்களுக்கு பல நல்ல திட்டங்கள் உள்ளன. இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பெண் முதலீட்டாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நல்ல வருமானத்தையும் தருகிறது. பல திட்டங்கள் வங்கிகளை விட அதிக வருமானத்தையும் தருகின்றன. இந்நிலையில், நாம் பெண்களுக்கான சிறந்த அஞ்சலகத்தின் 5 சேமிப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தபால் அலுவலக PPF திட்டம்
அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், பெண்களுக்கு மட்டுமல்லா, இரு பாலினருக்கும் ஏற்ற ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம். அதற்கான வட்டி விகிதம் 7.1%. இந்தத் திட்டம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானது. நல்ல வருமானமும் அளிக்கக் கூடியது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்து, நிதி ரீதியாக தன்னிறைவு பெறலாம்.
சுகன்யா சம்ரித்தி சேமிப்பு திட்டம் என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெற்றோர்கள், மகளுக்கு 10 வயதாகும் முன் திட்டத்தை தொடங்கலாம். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும். கணக்கைத் திறந்த பிறகு, அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கும் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.
மேலும் படிக்க | 7 கோடி PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: வட்டி விகிதம் குறித்த குஷியான அப்டேட்
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது பெண் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான திட்டமாகும். அனைத்து வயது பெண்களும் இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை ஒரு கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதில் நீங்கள் ஆண்டுதோறும் 7.5% வட்டியைப் பெறுவீர்கள். தேவைப்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு உங்கள் வைப்புத் தொகையில் 40% திரும்பப் பெறலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் பெண்களுக்கான மற்றொரு சிறந்த திட்டம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1000. இதில் 7.4% வட்டி கிடைக்கும். இந்த திட்டம் முலம் மாதம் தோறும் வழக்கமான வருமானத்தை பெறலாம். மூத்த குடிமக்கள் அதிகம் பயன்படுத்தும் திட்டங்களில் இதுவும் ஒன்று.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது பாதுகாப்பான மற்றொரு திட்டமாகும், இது அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 மற்றும் அதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், அக்டோபர் 1, 2024 முதல் புதிய என்எஸ்சியில் டெபாசிட்களுக்கு வட்டி கிடைக்காது, ஆனால் செப்டம்பர் 30, 2024 வரை டெபாசிட்களுக்கு 7.5% வட்டி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ