ரயிலில் கேன்சல் செய்த டிக்கெட்டின் பணத்தை உடனே பெறுவது எப்படி?
Train Ticket Refund: IRCTCயின் புதிய அப்டேட் மூலம் பயணிகள் கேன்சல் செய்த ரயில் டிக்கெட்டிற்கான பணத்தை ஒரு மணி நேரத்திற்குள் பெற முடியும்.
Train Ticket Refund: ரயிலில் பயணம் செய்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் டிக்கெட் புக் செய்யும் போது, டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். இந்த சமயங்களில் அந்த பணத்தை திரும்ப பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, புக் செய்த டிக்கெட்டை ரத்து செய்தாலும், அந்த பணத்தை பெற பல நாட்கள் ஆகும். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு தற்போது தீர்வு ஒன்று கிடைத்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் ஆப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் மூலம் பயணிகள் ஒரு மணி நேரத்தில் தங்கள் டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெற முடியும்.
மேலும் படிக்க | இன்னும் மூணு நாள் தான் இருக்கு... ஆதார் கார்டு அப்டேட் பண்ணிட்டீங்களா..!
IRCTC மற்றும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) இணைந்து இந்த முக்கிய மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதன் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாத பட்சத்தில் பயணிகளின் பணம் ரயில்வேயால் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் அடுத்த 1 மணி நேரத்திற்குள் திருப்பி அளிக்கப்படும். அதே போல, பயணிகள் புக் செய்து இருந்த டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், அவர்களுக்கும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்பதால் ஐஆர்சிடிசி விரைவாக இந்த திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. இதற்கு முன்பு, டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெற நீண்ட நேரம் ஆகிறது என்று ரயில்வே மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்த நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேவை கட்டணம் கிடைக்காது
IRCTC மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். கேன்சல் செய்த டிக்கெட்டிற்கான பணத்தை 1 மணி நேரத்திற்குள் பயணிகள் பெற முடியும் என்றாலும் சேவை கட்டணத்தை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது IRCTC உங்களிடம் வசூலிக்கும் சேவை கட்டணத்தை உங்களால் திரும்பப் பெற முடியாது. டிஜிட்டல் செயல்முறை மூலம், டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது டிக்கெட் முன்பதிவு செய்யப்படாவிட்டாலோ அதற்கான பணத்தை மட்டுமே பயணிகளால் பெற முடியும்.
ரயில்வேயிடம் உங்கள் பணத்தை திரும்பக் கேட்பதற்கு பல காரணங்கள் அமையலாம். உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாவிட்டாலும், உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டாலும், நீங்கள் பணத்தைத் திரும்ப பெற முடியும். இது தவிர, ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது முன்பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது தாமதம் காரணமாக ரயிலை ரத்து செய்தாலோ உங்கள் பணத்தை ரயில்வேயிடம் இருந்து திரும்ப பெற முடியும். நீங்கள் ரயிலில் ஏசி கோச் புக் செய்து இருக்கும் பட்சத்தில், ரயிலின் ஏசி வேலை செய்யவில்லை என்றால் அதற்கான பணத்தைத் திரும்பக் கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு வழியிலும் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், டிக்கெட் டெபாசிட் ரசீது (TDR) மூலம் நீங்கள் அதை பெற முடியும். இந்த வேலையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். புதிய முறை அமலுக்கு வந்த பிறகு, 1 மணி நேரத்திற்குள் TDR தாக்கல் செய்பவர்களுக்கு அனைத்து வகையான பணத்தையும் திரும்ப பெற முடியும்.
மேலும் படிக்க | குழந்தைகளை ஆன்லைனில் உஷாராக பார்த்துக்கொள்வது எப்படி? இதோ டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ