Petrol Diesel Price: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போதைய நிலைமையில் குறைய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் (OMCs) முந்தைய காலாண்டுகளில் அதிக கச்சா எண்ணெய் விலை காரணமாக, சந்தித்த சுமார் 18,000 கோடி ரூபாய் இழப்பை மீட்டெடுக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கச்சா எண்ணெய் மலிவானதை அடுத்து, எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்ற சந்தையில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி உட்பட அமெரிக்காவில் வங்கிகள் சரிவை சந்தித்த பிறகு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 75.03 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பீபாய்க்கு 100 அமெரிக்க டாலராக இருந்தது.


எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை


கடந்தாண்டு மே மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலால் வரியை குறைத்தார். அதன்மூலம், பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைந்தது. அதன்பின், இந்தியாவில் எரிபொருள் விலைகள் பல மாதங்களாக தேக்கநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், அகவிலைப்படி ஏற்றம்... சம்பளம் உயரும்!!


தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ரூ. 18,000 கோடி மதிப்பிலான இழப்பை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இந்த கட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சாத்தியமில்லாதது என கூறப்படுகிறது.


அமைச்சகம் என்ன சொல்கிறது?


எரிபொருள் விலைகள் குறித்த கேள்விக்கு, பெட்ரோலிய அமைச்சகம் முன்னதாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூபாய் மதிப்பில் டிசம்பர் 2021 முதல் மார்ச் 2023 வரை 23 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் டெல்லியில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிப்பு முறையே 1.08 சதவீதம் மற்றும் 3.40 சதவீதம் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளது. 


2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் (OMCs) உயர்த்தவில்லை என்று அமைச்சகம் மேலும் கூறியது.


மேலும் படிக்க | உங்களை அம்பானியாக்கும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ