ITR Filing Deadline: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது! CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. முன்னர் இதற்கான காலக்கெடு அக்டோபர் 31, 2024 ஆக இருந்தது. இப்போது இது நவம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நீட்டிப்பு, 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குகளுக்குப் பொருந்தும். இப்போது இவற்றை  நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். சமீபத்தில் வரித் தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 2024 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 7, 2024 -க்கு அரசாங்கம் நீட்டித்தது. இதைத் தொடர்ந்து இப்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. 


வருமான வரி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி செலுத்துவோர் வருமான வரி தணிக்கையை முடித்து மதிப்பீட்டு ஆண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சந்தீப் ஜுன்ஜுன்வாலா, நாங்கியா ஆண்டர்சன் எல்எல்பி -இன் வரி பங்குதாரரான சந்தீப் ஜுன்ஜுன்வாலா இது குறித்த சில விளக்கங்களை அளித்தார். வரி தணிக்கை அறிக்கை, படிவம் 3CEB இல் உள்ள விலைச் சான்றிதழை மாற்றுதல் அல்லது படிவம் 10DA போன்ற பிற படிவங்களை இந்த நீட்டிப்பு பாதிக்காது என அவர் தெளிவுபடுத்தினார். இவற்றை அக்டோபர் 31, 2024 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்


AMRG & அசோசியேட்ஸின் மூத்த கூட்டாளர் ரஜத் மோகன், நீட்டிப்புக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை CBDT குறிப்பிடவில்லை என்றாலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படிருக்கலாம் என தெவித்தார். "நவம்பர் 15, 2024 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பதால், வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கடைசி நிமிட வரி தாக்கல்களின் அழுத்தம் இல்லாமல் துல்லியமாகவும் இணக்கத்திற்கு முன்னுரிமை அளித்தும் இந்த பணியை செய்ய முடியும்" என்று மோகன் கூறினார்.


ஜுன்ஜுன்வாலா, "இந்த காலக்கெடு நீட்டிப்பு, முக்கியமான பண்டிகை காலத்தில் இணக்கத்தை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது போல் தெரிகிறது. முக்கியமான தணிக்கை ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதையும் இது உறுதி செய்கிறது." என்று தெரிவித்தார். முன்னதாக செப்டம்பரில், CBDT ஏற்கனவே வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஏழு நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 7 வரை நீட்டித்தது.


வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


வரி முறைகளை எளிமைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கிடையில் வருமான சமத்துவமின்மை 74.2 சதவீதம் குறைந்துள்ளது என்று SBI ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. இது குறைந்த வருமானம் உள்ளவர்களிடையே அரசாங்கத்தின் முன்முயற்சிகள் திறம்பட வருமானத்தை அதிகரிப்பதைக் காட்டுகிறது. நேரடி வரி பங்களிப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் முற்போக்கான வரி முறையானது 2024 மதிப்பீட்டு ஆண்டில் மொத்த வரி வருவாயில் 56.7 சதவீதமாக நேரடி வரி பங்களிப்பை அதிகரித்துள்ளது. இது 14 ஆண்டுகளில் மிக அதிகமான அளவாகும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்: ஊதிய உயர்வுடன் 8வது ஊதியக்குழு... அடுத்த மாதம் முக்கிய முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ