ITR Big news: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது, புதிய தேதி இதுதான்
வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நிட்டித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
புது டெல்லி: வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நிட்டித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது. “மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரிச் சட்டம், 1961 இன் 119 வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தளர்வு அளிக்கிறது…, ”என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால், வருமான வரித்துறை இந்த முடிவை எடுத்து காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) புதிய வருமான வரி தாக்கலுக்கான முக்கிய தேதிகளின் விவரம் இதோ:
1) வழக்கமான தனி நபர் வரி (Tax) செலுத்துவோருக்கு, 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு 2021 ஜூலை 31-லிருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
2) தணிக்கை மதிப்பீட்டாளர்களுக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை நேரம் இருக்கும். முன்னதாக இந்த தேதி அக்டோபர் 31 ஆக இருந்தது.
3) வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-லிருந்து அக்டோபர் 31-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என சிபிடிடி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4) தாமதமான / திருத்தப்பட்ட வருமான வரி (Income Tax) தாக்கலுக்கான காலக்கெடு 2021, டிசம்பர் 31-லிருந்து 2022, ஜனவரி 31- ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
5) பரிமாற்ற விலை நிர்ணய ஆய்வு அறிக்கையின் உரிய தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
ALSO READ: வரி செலுத்துவோர் கவனத்திற்கு, ITR E-Filing இனி புதிய போர்டலில் செய்ய வேண்டும்
6) எஸ்.எஃப்.டி -க்கான தேதி 2021 மே 31-லிருந்து 2021 ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது
7) அறிக்கையிடத்தக்க கணக்கின் அறிக்கை - மே 31-லிருந்து ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது
8) 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான டி.டி.எஸ் அறிக்கை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. முன்னதாக டி.டி.எஸ் (TDS) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31 ஆக இருந்தது.
9) படிவம் 16 ஐ வழங்குவதற்கான கடைசி தேதி ஜூலை 15 வரை , அதாவது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காலக்கெடு முன்னர் ஜூன் 15 ஆக இருந்தது.
"பல்வேறு காலக்கெடு தளர்வுகள் தற்போதைய நெருக்கடியில் போராடி வரும் வணிகங்களுக்கான இணக்க சுமையை குறைக்கும். வணிகங்கள் தங்கள் வரி இணக்கத்தை முழுமையாக ஆன்லைனில் மாற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதையும் இது வலியுறுத்துகிறது "என்று கிளியர்டாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறினார்.
ALSO READ: தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் வரி விலக்குடன் நிரந்தர வருமானம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR