புதுடில்லி: இந்தியாவில் வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய புதிய வலைத்தளத்தைப் (Web Portal) பெற உள்ளனர். புதிய வலைத்தளத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது எளிதாகவும் தொந்தரவில்லாமலும் இருக்கும். புதிய வலைத்தளம் தொடர்பாக வருமான வரித்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
புதிய ஐடிஆர் போர்டல் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும்
தற்போதுள்ள வலைத்தளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது என்றும், வரி செலுத்துவோருக்கான (Tax Payers) புதிய வருமான வரி வலைத்தளம் ஜூன் 7 முதல் தொடங்கும் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பழைய போர்ட்டலான www.incometaxindiaefiling.gov.in இலிருந்து புதிய போர்டலான www.incometaxgov.in க்கு மாறும் பணிகள் நிறைவடையும் என்றும் ஜூன் 7 முதல் புதிய போர்டல் செயல்படும் என்றும் வருமான வரித்துறையின் கணினி பிரிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் போர்டல் செயல்படும் என்றும் அதன் பிறகு வரி செலுத்துவோர் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 1-6 வரை போர்ட்டல் இயங்காது
ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை, பழைய வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in -ல் வரி செலுத்துவோரும் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றும், வருமான வரித் துறையும் (Income Tax Department) பணிகளை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. எந்த விதமான புகார்கள் அல்லது விசாரணைகளின் தீர்வுகளுக்கான தேதியை ஜூன் 10 க்குப் பிறகு நிர்ணயித்துக்கொள்ளுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த இடைவெளிக்குள் வரி செலுத்துவோர் புதிய முறையை நன்கு புரிந்து கொள்ள முடியும். மேலும், வரி செலுத்துவோர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையே திட்டமிடப்பட்ட எந்தவொரு வேலையும் ஒத்திவைக்கப்படலாம் அல்லது முன்பே தீர்க்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் வரி விலக்குடன் நிரந்தர வருமானம்!!
வரி தொடர்பான பல பணிகள் ஐ.டி.ஆர் போர்ட்டலில் செய்யப்படுகின்றன
வரி (Tax) செலுத்துவோர் தங்கள் தனிப்பட்ட அல்லது வணிக வகை ஐ.டி.ஆர்களை நிரப்ப மின்-தாக்கல் போர்டல் (E-Filing Portal) பயன்படுத்தப்படுகிறது. பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வரித் துறை தொடர்பான பிற பணிகள் தொடர்பான புகார்களும் இங்கு தீர்க்கப்படுகின்றன. வருமான வரி அதிகாரிகள் அறிவிப்புகளை வழங்கவும், வரி செலுத்துவோரிடமிருந்து பதில்களைப் பெறவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இந்த போர்ட்டலைப் பயன்படுத்துகின்றனர். மதிப்பீடுகள், முறையீடுகள், விலக்கு மற்றும் அபராதம் போன்ற உத்தரவுகளைப் பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் இந்த போர்டல் மூலம் வழங்குகிறார்கள்.
ரூ .24,792 கோடி ரீஃபண்ட்
இதற்கிடையில், இந்த நிதியாண்டில் 15 லட்சம் வரி செலுத்துவோருக்கு ஐ.டி துறை 24,792 கோடி ரூபாய் பணத்தை ரீஃபண்ட் செய்துள்ளது (திரும்ப அனுப்பியுள்ளது). இதில், தனிநபர் வருமான வரி ரீஃபண்ட் ரூ .7,458 கோடி, பெருநிறுவன வரி ரீஃபண்ட் ரூ .17,334 கோடியாகும்.
ALSO READ: ITR Update: வருமான வரி Refund விரைவில் திரும்பப்பெறலாம், எப்படி? இப்படித்தான்..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR