Small Saving Schemes: அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமான விருப்பமாகக் கருதப்படுகிறது. சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்றவை முக்கியமான திட்டங்களாக உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்து வகை மக்களுக்குமானவை. இவை வரிச் சலுகைகள் முதல் உத்தரவாதமான வருமானம் வரை பல நன்மைகளை வழங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில் அதிக அளவிலான மக்கள் இந்த அரசாங்க சிறுசேமிப்பு திட்டங்களில் (Small Saving Schemes) முதலீடு செய்து வருகிறார்கள். இவற்றில் பல நன்மைகள் உள்ளன. சிறு சேமிப்பு திட்டங்களின் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். 


உத்தரவாதமான வருமானம்


- பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.


- இதில் முதலீட்டாளர்கள் கச்சிதமான வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்திருப்பதால், அத்தகைய திட்டங்கள் ஆபத்து இல்லாதவையாகவும், நல்ல முதலீட்டு விருப்பங்களாகவும் அமைகின்றன.


நிதி சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மை


- உத்தரவாதமான வருமானம் முதலீட்டாளருக்கும் அவரது குடும்பத்திற்கும் நிதி சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் அளிக்கிறது.


- சிறு சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் வழக்கமான வருமானத்தின் அடித்தளமாக செயல்படுகின்றன. மேலும் இவை வலுவான நிதி மூலோபாயத்தைத் தயாரிக்க உதவுகின்றன.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரியில் 5% டிஏ ஹைக்... 51% ஆக உயரும் அகவிலைப்படி


வருமான வரி விலக்கு


- பல சிறு சேமிப்புத் திட்டங்கள் வரி விலக்கின் பலனை வழங்குகின்றன.


- வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.


PPF, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், நேர வைப்பு மற்றும் FD போன்ற திட்டங்கள் வரி விலக்கின் பலனை வழங்குகின்றன.


குறைந்தபட்ச முதலீடு


- முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச முதலீடு செய்ய வேண்டும்.


- சிறு சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்து, தொகை ரூ.250 முதல் ரூ.1,000 வரை இருக்கும்.


- இந்தத் திட்டங்களில் சிறிய தொகையையும் முதலீடு செய்யலாம்.


வருமான உத்தரவாதம்


- இன்றைய காலகட்டத்தில், மக்கள் பங்குச் சந்தை மற்றும் மியூசுவல் ஃப்ண்டுகள் போன்ற ஆபத்தான இடங்களில் முதலீடு செய்கிறார்கள்.


- அதேசமயம் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான, உறுதியான வருமானத்தை அளிக்கின்றன. 


- இதில் ஒரு நிலையான வட்டியுடன், முதிர்ச்சியின் போது நாம் எவ்வளவு தொகையைப் பெறுவோம் என்பதை நாம் முன்கூட்டியே அறிய முடியும்.


- அதாவது இவற்றில் முதலீடு செய்துவிட்டால், எதிர்காலத்தில் நிச்சயமான பாதுகாப்பான வருமானம் கிடைக்கும் என்பது உறுதி.


சிறு சேமிப்புத் திட்டங்கள் என்பது நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையால் (DEA) கட்டுப்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இந்தத் திட்டங்களில் அதிக மக்கள் ஆர்வம் காட்டும் சூழலை ஏற்படுத்தும் வகையில், அதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தற்போதுள்ள விதிகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாற்றம் அவர்களின் வசதிக்கேற்ப கணக்கைத் திறக்க உதவுகிறது. மூத்த குடுமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய முதலீட்டுத் தேர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


மேலும் படிக்க | அதிக வட்டி, இலவச காப்பீடு...EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ