ரேஷன் கார்டு தொடர்பான லேட்டஸ்ட் நியூஸ்: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால் இந்தச் செய்தி கட்டாயம் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். ஆம், இந்த மாதம் அதாவது மே மாதத்தில் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் விநியோகம் செய்ய ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரேஷன் இரண்டு வெவ்வேறு தேதிகளில் அரசு மலிவான தானியக் கடையில் இருந்து விநியோகிக்கப்படும். ஹரியானா அரசு சார்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 31 லட்சத்து 87 ஆயிரத்து 107 கார்டுதாரர்களுக்கு மே மாதம் இருமுறை சர்க்கரை, கோதுமை, அரிசி வழங்கப்படும். இந்த ரேஷன் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜனவரி மாதம் முதல் ரேஷன் விநியோகம் நடந்து வருகிறது
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் விநியோகம் தற்போது ரேஷன் டிப்போக்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகு, மே மாத ரேஷன் விநியோகம் மே 20 ஆம் தேதி தொடங்கும். ஹரியானாவில் குடும்ப அடையாள அட்டை அமலுக்கு வந்த பிறகு, ஒரு மாத ரேஷன் வினியோகம் தொடர்பாக ஜனவரி மாதம் முதல் பிரச்சனை தொடங்கியது. இதற்குப் பிறகு, ஜனவரி மாத ரேஷன் பிப்ரவரியிலும், பிப்ரவரி மாத ரேஷன் மார்சிலும் மற்றும் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் ஏப்ரல் மாதமும் விநியோகிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருள் விநியோகம் இந்த ம்ஆதம் அதாவது மே மாதம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், மே மாதத்துக்கான ரேஷன் இதே மாதம் அதாவது வருகிற மே, 20 ஆம் தேதி வினியோகிக்க ஹரியானா அரசு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம், ரேஷன் பயனாளிகளுக்கு மே மாதம் அரசு சார்பில் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.


மேலும் படிக்க | கார் லோன் வாங்க போறீங்களா.... இந்த செய்தி உங்களுக்குத் தான்!


31.87 லட்சம் அட்டைதாரர்கள் பயனடைவார்கள்
இதற்கிடையில் ஹரியானாவின் உணவு வழங்கல் துறை மே மாதத்தில் 31.87 லட்சம் கார்டுதாரர்களுக்கு கோதுமை மற்றும் சர்க்கரையை விநியோகிக்கும். இதில், அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்) (AAY) கார்டுதாரர்களுக்கு 26 ஆயிரத்து 259 கிலோவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாநில (SBPL) கார்டுதாரர்களுக்கு மே மாதத்துக்கு 20.64 லட்சம் கிலோவும் விநியோக்கிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்த அட்டைதாரர்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏழைகளுக்கான உணவுத் திட்டம்) (AAY)க்கு 19.28 லட்சம் கோதுமையும், SBPL வகைக்கு 3.40 கோடி கிலோவும் ஒதுக்கீடு செய்து மே மாதம் வழங்கப்பட்டுள்ளது.


ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பம்பர் லாபம்... இந்த வங்கியின் FD திட்டங்களில் வட்டி விகிதம் உயர்வு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ