இந்தியன் ரயில்வே பல கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், அதன் சேவை மற்றும் எளிமை அணுகுமுறை தான். இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ரயில் சேவைகளை பயன்படுத்தி, நீண்ட தூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்கின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களுடனான இணைப்பு, விரைவான சேவை உள்ளிட்டவை ரயில்வே துறையில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல மாற்றங்களை செய்கிறது. ரயில் பயணிகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க பல வித புதுப்பிப்புகளை இந்திய ரயில்வே வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நிதியாண்டில், ரயில்வே 8 வந்தே பாரத் ரயில்களை வழித்தடங்களில் தொடங்கியுள்ளது, குறிப்பாக பயணிகளின் வசதிகளுக்கு கவனம் செலுத்தி பல புதிய ரயிகள் இயக்கப்பட்டு வருகின்றது. இது தவிர, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் போன்றோருக்கு டிக்கெட் தொகையில் தள்ளுபடி அளிப்பது மட்டுமின்றி, முன்பதிவில் முன்னுரிமை, ஒதுக்கப்படும் இருக்கைகளின் முன்னுரிமை என பல்வேறு சேவைகள் உள்ளன. இருப்பினும் இதில் மூத்த குடிமக்களின் சலுகை கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நிறுத்தப்பட்டது.


மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்


இந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலின்படி, ரயில்வேயின் வருவாய் சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும்2022-23 நிதியாண்டில், பயணிகள் பிரிவு ரூ.6345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அந்தவகையில் இதுவே இதுவரை கிடைத்த அதிகபட்ச வருமானமாகும்.


முன்னதாக இந்திய ரயில்வே 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அளித்து வந்தது. மறுபுறம் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 58 ஆகும். அதாவது 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டது. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அனைத்து ரயில்களிலும் இந்த தள்ளுபடி அளிக்கப்பட்டது.


2022-23ல் 64 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்
இதற்கிடையில் கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே மொத்தம் ரூ.3,539.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முன்னதாக 2019-20 நிதியாண்டில், தெற்கு ரயில்வே அதிகபட்சமாக ரூ.5,225 கோடி வருவாய் ஈட்டியது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2022-23 நிதியாண்டில் சுமார் 64 கோடி பயணிகள் தெற்கு ரயில்வேயில் பயணம் செய்துள்ளனர். இது 2021-22 நிதியாண்டை விட 88.5 சதவீதம் அதிகமாகும். அதேபோல் 2021-22 நிதியாண்டில் 34 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் தெற்கு ரயில்வே பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி தற்போது ரயில்வேயின் வருமானம் அதிகரித்துள்ளதையடுத்து, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.


முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உடல் ஊனமுற்றோருக்கு லோயர் பெர்த் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதனுடன், உடல் ஊனமுற்றோருடன் பயணிக்கும் நபர்களுக்கு லோயர் பர்த் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், முதியோர் மற்றும் பெண்களுக்கான கீழ் பெர்த் வசதியையும் ரயில்வே தொடங்கியுள்ளது. இது தொடர்பான உத்தரவு ரயில்வே வாரியம் மூலம் பிறப்பிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ