Post Office MIS திட்டம்: ஒரு முறை முதலீடு, எக்கசக்க வட்டி...மாதா மாதம் நிச்சய வருமானம்
POMIS: ஒரு முறை பணம் டெபாசிட் செய்யப்பட்டால், ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் ஒரு சூப்பர்ஹிட் திட்டம் உள்ளது.
Post Office Monthly Income Scheme (POMIS): சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
சிறு சேமிப்பிலிருந்து உத்தரவாதமான வருமானத்தை பெற நாட்டம் உள்ளவர்களுக்கு அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் சிறந்தவை. இவற்றில், ஒரு முறை பணம் டெபாசிட் செய்யப்பட்டால், ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் ஒரு சூப்பர்ஹிட் திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். அஞ்சல் அலுவலக MIS இல் ஒற்றை மற்றும் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம். எம்ஐஎஸ் கணக்கில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்தால் போதும். கணக்கு தொடங்கியதிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அது மெச்யூர் அடையும். இந்தத் திட்டத்தில் அக்டோபர் 1, 2023 முதல் 7.4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகின்றது.
POMIS: மாத வருமானம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில், ஒற்றைக் கணக்கில் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். முதலீட்டாளர் விரும்பினால், அவரது மொத்த அசல் தொகை 5 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு திருப்பித் தரப்படும். அதே நேரத்தில், இதை மேலும் 5 ஆண்டு காலங்களிலும் நீட்டிக்கலாம். கணக்கு நீட்டிக்கப்பட்டால், 5 வருடங்களுக்கு ஒரு முறை, அசல் தொகையை திரும்பப் பெற அல்லது திட்டத்தை நீட்டிக்க விருப்பம் அளிக்கப்படும். கணக்கில் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு மாதமும் உங்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்.
5 லட்சம் டெபாசிட்டில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தில் மாத வருமானம் உறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி 7.4 சதவீதம் ஆகும். ஒருவர் 5 லட்சம் டெபாசிட் செய்திருந்தால், வட்டி வடிவத்தில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 வருமானம் கிடைக்கும். இதன் மூலம் 12 மாதங்களில் கிடைக்கும் வருமானம் ரூ.36,996 ஆக இருக்கும்.
விதிகளின்படி, எம்ஐஎஸ்-ல் (MIS) இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கிலிருந்து பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. கூட்டுக் கணக்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒற்றைக் கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கையும் கூட்டுக் கணக்காக மாற்றலாம். கணக்கில் மாற்றங்களை செய்ய, அனைத்து கணக்கு உறுப்பினர்களும் ஒரு கூட்டு விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.
மெச்யுரிட்டி காலம்
MIS இன் மெச்யுரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கணக்கு மூடப்படும். இதில் கணக்கை முன்கூட்டியேவும் மூடலாம் (Premature closure). இருப்பினும், டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே நீங்கள் பணத்தை எடுக்க முடியும். ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழிக்கப்பட்டு திருப்பித் தரப்படும். கணக்கு தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சிக்கு முன் பணத்தை எடுத்தால், உங்கள் வைப்புத்தொகையில் 1% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பித் தரப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ