Post office Time Deposit Scheme: மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எதிர்கால பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தவும், பணத்தை பெருக்கவும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் சிலர் பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை போடுகிறார்கள். எனினும், பெரும்பாலான உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பாதுகாப்பான பல சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகம் மூலம் நடத்தப்படுகின்றன. அதில் ஒரு திட்டமான, அதிக வட்டி அளிக்கக்கூடிய போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் (TD Account) பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்:


உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தபால் அலுவலகம் சிறந்த வழியாக உள்ளது. தபால் அலுவலகத்தில் பல வகையான சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் எஃப்.டி.க்கள் உள்ளன. எனினும், முதலீட்டாளர்களுக்கு எஸ்பிஐ -ஐ (SBI) விட அதிக வட்டி கிடைக்கும் தபால் நிலையத்தின் நேர வைப்புத் திட்டம் (Time Deposit Scheme - TD Account) பற்றி இங்கே காணலாம். இந்தத் திட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 


7.5 சதவீத வட்டி கிடைக்கும்


போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் (Time Deposit Scheme) கீழ், 5 வருட டெபாசிட்டுகளுக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். 1-3 வருடங்களுக்கு இதில் முதலீடு செய்தால் 6.90 சதவீதம் வட்டி கிடைக்கும். இது தவிர, 5 ஆண்டுகள் டெபாசிட் செய்தால், 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | தமிழகத்திற்கு MGNREGA நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை


எத்தனை நாட்களில் பணம் இரட்டிப்பாகும்?


ஒரு முதலீட்டாளர் டைம் டெபாசிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, 7.5 சதவீத வட்டியைப் பெற்றால், அவரது பணம் இரட்டிப்பாவதற்கு சுமார் 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் அதாவது 114 மாதங்கள் ஆகும்.


- வைப்பு (Deposit): 5 லட்சம்
- வட்டி (Interest): 7.5 சதவீதம்
- முதிர்வு காலம் (Maturity Period): 5 ஆண்டுகள்
- முதிர்வுத் தொகை: ரூ. 7,24,974
- வட்டி பலன்: ரூ.2,24,974


யார் கணக்கைத் திறக்கலாம்?


இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடங்கலாம். இது தவிர, 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கையும் (Time deposit Joint account) திறக்கலாம். இது தவிர 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம்.


டைம் டெபாசிட் திட்டத்தின் நன்மை என்ன?


நேர வைப்புத் திட்டம், அதாவது டைம் டெபாசிட் திட்டம் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கின் பலனை வழங்குகிறது. கணக்கைத் திறக்கும் போது நாமினியை பரிந்துரைக்கும் வசதியும் உள்ளது. இருப்பினும், மெச்யூரிட்டிக்கு முன்னரே பணத்தை எடுத்தால் (Premature Withdrawal) இந்த திட்டத்தில் அபராதம் விதிக்கப்படும். 


இந்தியா போஸ்ட் டெபாசிட் திட்டங்கள் 


இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.


மேலும் படிக்க | EPFO ஜாக்பாட் செய்தி: ஊழியர்களுக்கு அடிச்சுது லாட்டரி, கணக்கில் வட்டி தொகை வரும், இப்படி செக் செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ