வங்கிகளின் ஏடிஎம் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பதை பற்றிய விழிப்புணர்வு இப்போது பலருக்கும் வந்துவிட்டது.  மற்ற தொழில்களை காட்டிலும், இந்த ஏடிஎம் ஃபிரான்சைஸ் வழக்கமான வருமானம் தரும் நல்ல தொழிலாகக் கருதப்படுகிறது.  இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.  பல வங்கிகள் ஏடிஎம்களுக்கான உரிமையை வழங்குகின்றன, இப்போது நாட்டின் மிகப்பெரிய வங்கியின் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உரிமையை பெறுவது எப்படி என்பதை பற்றி இங்கு காண்போம்.  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் இந்த எஸ்பிஐ ஏடிஎம்ஃபிரான்சைஸ் உரிமையை பெற நீங்கள் சில முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் சில தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உஷார்!! ரூ.2000 -ஐ தொடர்ந்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் பற்றி வந்த முக்கிய அப்டேட்


எஸ்பிஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறும் தொழிலாக கருதப்படுகிறது.  உங்களுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி இந்த நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலை நீங்கள் தொடங்கலாம்.  நீங்கள் நிறுவும் ஏடிஎம்மில் இருந்து தினமும் 300 முதல் 500 பரிவர்த்தனைகள் நடக்குமானால் உங்களுக்கு கண்டிப்பாக மாதந்தோறும் ரூ. 45,000 முதல் ரூ. 90,000 வரை வருமானம் கிடைக்கப்பெறும். எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை பெற சுமார் ரூ.5 லட்சம் முதலீடு செய்யவேண்டும்.  இதில் ரூ.2 லட்சம் திரும்பப்பெறும் தொகையாக எஸ்பிஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது, மீதமுள்ள ரூ.3 லட்சம் செயல்பாட்டு மூலதனமாக வைக்கப்படுகிறது.  ஏடிஎம் உரிமை பெறுவதற்கான ஒப்பந்தம் முடிவதற்குள் ஏதேனும் காரணத்திற்காக ஏடிஎம் இயக்குவதை நிறுத்த முடிவு செய்தால், எஸ்பிஐ ரூ.1 லட்சத்தை மட்டுமே திருப்பித் தரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  எஸ்பிஐ ஃபிரான்சைஸ் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.8 மற்றும் பணமில்லா பரிவர்த்தனைக்கு ரூ.2 வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது அல்லது மினி ஸ்டேட்மெண்டை பெறுவது போன்றவை பணமில்லா பரிவர்த்தனைகளின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் பெற தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:


1) உங்களுக்கு சொந்தமாக 50 முதல் 80 சதுர அடி வரை நிலம் இருக்க வேண்டும்.


2) உங்கள் ஏடிஎம் இருப்பிடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வேறு எந்த வங்கியின் ஏடிஎம்களும் இருக்கக்கூடாது.


3) விண்ணப்பதாரர் தினமும் குறைந்தது 300 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.


4) ஏடிஎம் பாதுகாப்பிற்கு உறுதியான கான்கிரீட் கூரை இருப்பது அவசியம்.


5) ATM V-SAT நிறுவலுக்கு, அதிகாரிகள் அல்லது சமூகத்திடம் இருந்து NOC அதாவது தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.


விண்ணப்பிக்க தேவையான கேஒய்சி ஆவணங்கள்:


எஸ்பிஐ ஏடிஎம் உரிமையைப் பெறுவதற்கு கட்டாயம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.  இதில் அடையாளச் சான்றுக்கான பான், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, மின்சாரக் கட்டணம், ரேஷன் கார்டு மற்றும் முகவரிச் சான்றாக வங்கி பாஸ்புக், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், ஜிஎஸ்டி பதிவு மற்றும் ஜிஎஸ்டி எண் போன்ற முக்கியமான ஆவணங்கள் அடங்கும்.  கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்புநிலை, லாபம் மற்றும் இழப்பு கணக்கு போன்ற நிதி ஆவணங்களும் தேவைப்படும்.  எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை பெற ஆன்லைன் மூலமாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.   எஸ்பிஐ ஏடிஎம் நிறுவல் கோரிக்கைகளை டாடா இண்டிகேஷ், இந்தியா ஒன் மற்றும் முத்தூட் போன்ற எஸ்பிஐ நியமித்த நிறுவனங்கள் தான் சரிபார்க்கிறது.  விண்ணப்பித்த பிறகு, எஸ்பிஐ ஏடிஎம் உரிமக் குழு உங்களைத் தொடர்புகொள்ளும்.


மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ