ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழாகும், இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும்.  ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம், இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்யும் சான்றாகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாக வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவையான ஆவணங்கள்:


1) ஆதார் எண்
2) ஓய்வூதியம் செலுத்துவதற்கான உத்தரவு
3) வங்கி கணக்கு
4) வங்கி பெயர்
5) கைபேசி எண்.


மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது


ஜீவன் பிரமன் போர்ட்டல் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை உருவாக்குதல்:


1) ஓய்வூதியதாரர் https://jeevanpramaan.gov.in/app/download & கிளையன்ட் புரோகிராமில் இருந்து டிஎல்சி-ஐ உருவாக்கி, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் போன்/டேப்லெட் அல்லது விண்டோஸ் பிசி/லேப்டாப்பில் ஜெபி செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 


2) டவுன்லோடு செய்த பிறகு, ஓய்வூதியதாரர் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளீட்டு ஆன்லைன் விண்ணப்பப் படிவம்/மென்பொருள் தொகுதியில் வழங்கப்பட்ட ஓடிபி-ஐ பெறுவார்.


3) ஓடிபி-ஐ உள்ளிட்டதும், திரையில் பெயர் & மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு  'ஸ்கேன் ஃபிங்கர்' என்பதைக் கிளிக் செய்யவும்.


4) கைரேகை ஸ்கேனரில் கைரேகையை ஸ்கேன் செய்யவும் அல்லது பிசி/மொபைல்/டேப்பில் இணைக்கப்பட்டுள்ள ஐரிஸ் ஸ்கேனரில் கண்ணை ஸ்கேன் செய்யவும்.


5) கைரேகை/கண்ரேகை  அங்கீகரிக்கப்பட்டதும், கணினி 'டிவைஸ் ரிஜிஸ்ட்ரேஷன் சக்ஸஸ்' என்று திரையில் தெரியும், இப்போது சரி என்பதைக் கிளிக் செய்யவும்.


6) சான்றிதழ் உருவாக்கத்திற்கு ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு பின்னர் ஓடிபி-ஐ நிரப்பவும்.


7) பிறகு திரையில் ஓய்வூதியதாரர் பெயர், பிபிஓ எண், ஓய்வூதியத்தின் வகை, அனுமதி வழங்கும் அதிகாரத்தின் பெயர், விநியோகிக்கும் முகமை, மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற தகவலை உள்ளிடவும்.


8) பின்னர் 'ஸ்கேன் ஃபிங்கர்' என்பதை கிளிக் செய்யவும், இது விரல்/கருவிழி ஸ்கேனிங் செயல்முறையைத் தொடங்கும்.


மேற்கண்ட செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும் ஓய்வூதியதாரரின் வாழ்க்கைச் சான்றிதழ் திரையில் காண்பிக்கப்பட்டு ஓய்வூதியதாரரின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்டும்.


மேலும் படிக்க | Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ