LED விளக்குகளுக்கான தேவை அதிகரிப்பு; வெறும் ரூ .5000 முதலீடு வியாபாரத்தைத் தொடங்கலாம்
எல்.ஈ.டி (LED) விளக்குகளுக்கான தேவை சமீபத்தில் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. கடை உரிமையாளர்கள் இப்போது இந்த பல்புகளை தங்கள் கடையில் விற்கிறார்கள், ஏனெனில் அதிக தேவை உள்ளது.
புதுடெல்லி: எல்.ஈ.டி (LED) விளக்குகளுக்கான தேவை சமீபத்தில் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த ஒளி விளக்குகள் விரைவாக பரவுவதில்லை (உடனடியாக கண்களை ஒளி தாக்குவது இல்லை) மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும். கடை உரிமையாளர்கள் இப்போது இந்த பல்புகளை தங்கள் கடையில் விற்கிறார்கள், ஏனெனில் அதிக தேவை உள்ளது. இதனால்தான் ஏராளமான வல்லுநர்களும், LED தொழிலைத் தொடங்க பரிந்துரைக்கின்றனர். இந்தத் துறையில் எவ்வாறு சேரலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
உங்கள் சொந்த தொழிலைத் தொடங்குங்கள்
உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க நீங்கள் திட்டமிட்டால், எல்.ஈ.டி பல்புகளுடன் ஒரு தொழிலைத் தொடங்கலாம். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME Ministry) கீழ் பல நிறுவனங்கள் எல்.ஈ.டி தயாரிப்பில் பயிற்சி பெறுகின்றன.
நீங்கள் இங்கே பயிற்சி செய்யலாம்:
மேற்கு டெல்லியில் பாரதி வித்யாபீத் எல்.ஈ.டி விளக்கை தயாரிப்பது குறித்த பயற்சி படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு ரூ.5000 கட்டணம் உண்டு. எங்கள் கூட்டு வலைத்தளமான ஜீ பிசினஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, எல்.ஈ.டி தொடர்பான சிறிய விஷயங்கள் குறித்தும், எல்.ஈ.டி முறை குறித்த இங்கு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
READ ALSO | வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி; 1 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்
READ ALSO | வீட்டிலிருந்து வேலை (WFH) பார்க்கும் கலாச்சாரத்திற்கு தயாராகிறதா இந்தியா...?
READ ALSO | எஸ்பிரிமெண்டல் ஆர்ட் திட்டத்தின் கீழ் சும்மா இருப்பதற்கு சம்பளம்!
பயிற்சியின் போது எல்.ஈ.டி, (light emitting diode) பி.சி.பி உடன் தொடர்புடைய அடிப்படை தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும். இது தவிர, எல்.ஈ.டி டிரைவர், பொருத்துதல்கள், சோதனை, கொள்முதல், சந்தைப்படுத்தல், அரசு மானியத் திட்டம் போன்ற தகவல்கலும் உங்களுக்கு வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் பயிற்சி பெற்று உங்கள் சொந்த எல்.ஈ.டி வணிகத்தைத் தொடங்க திட்டமிட்டால், 99711-2866, 82175-82663 அல்லது 88066-14948 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் தகவல்களைக் காணலாம்.
குறைந்த மின் நுகர்வு
சி.எஃப்.எல் (CFL) பல்புகளுடன் ஒப்பிடும்போது எல்.ஈ.டி (LED) பல்புகளுக்கு மிகக் குறைந்த சக்தி தேவைப்படுகிறது. எல்.ஈ.டி விளக்கின் இயல்பான ஆயுள் 5000 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும். இதனுடன் ஒப்பிடுகையில், சி.எஃப்.எல் பல்புகள் 800 மணிநேரம் மட்டுமே நீடிக்கும். இதனால், எல்.ஈ.டி பல்புகள் சி.எஃப்.எல் பல்புகளை விட நீண்ட காலம் நீடிக்கும்.