எஸ்பிரிமெண்டல் ஆர்ட் திட்டத்தின் கீழ் சும்மா இருப்பதற்கு சம்பளம்!

எஸ்பிரிமன்டென்டல் கலை திட்டத்தின் கீழ் நீங்கள் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்கும் சம்பளம் தருவதாக அரசு அறிவித்துள்ளது!!

Last Updated : Mar 9, 2019, 03:15 PM IST
எஸ்பிரிமெண்டல் ஆர்ட் திட்டத்தின் கீழ் சும்மா இருப்பதற்கு சம்பளம்! title=

எஸ்பிரிமன்டென்டல் கலை திட்டத்தின் கீழ் நீங்கள் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்கும் சம்பளம் தருவதாக அரசு அறிவித்துள்ளது!!

நாட்டை சுற்றி எங்குபார்த்தாலும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாகி கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வேலை இன்றி விடுதிகளிலும், டீ கடைகளிலும் வேலை செய்து வருகின்ற சம்பவம் ஒவ்வொரு பகுதியிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. 

சிலர் பாக்கும் வேளையில் மிகுந்த வேலை பளு நிறைந்திருக்கும், சிலரது பணி வேலைப்பளு இன்றி சுலபமாக இருக்கும். நமக்கு ஒரு எளிமையான சும்மாவே இருப்பது போன்று ஏதாவது வேலைகிடைக்கதா என வேலைக்கு செல்லும் அனைவரும் நிலைப்பது உண்டு. இந்நிலையில், ஸ்வீடனில் வெளியாகியுள்ள வேலை குறித்த அறிவிப்பு ஒன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. ஸ்வீடனின் உள்ள கோதன்பர்ங் ரயில் நிலையத்தில் சும்மா அமர வேண்டும் என்பதுதான் வேலையே. காலை முதல் மாலை வரை இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. காலையில் வருகையை பதிவு செய்துவிட்டு சென்றுவிடாலம் ஆனால் மீண்டும் மாலையில் செல்வதை பதிவு செய்வது கட்டாயம்.

ரயில் நிலையத்தில் நீங்கள் படம் பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம், தூங்கலாம் மற்றபடி நீங்கள் பணிக்கு வந்ததை உறுதி செய்தால் போதும். இந்த பணி, நிரந்தர அரசுப்பணியாம். பிடிக்கவில்லை என்றால் வேலையை ராஜினாமாவும் செய்யலாம். இதற்கு நம்ம ஊர் மதிப்பில் மாதம்  1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் சம்பளமும் அளிக்கப்படுகிறது என்பதுதான் வியப்பின் உச்சக்கட்டம்.

சம்பளம் மட்டுமல்லாது வருடாந்திர ஊதிய உயர்வு, விடுமுறை மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் வழங்கப்படுகிறது. பணியில் இருப்பவர் ராஜினாமா செய்தால் அந்த வேலை அடுத்த ஒருவருக்கு வழங்கப்படும். 

 

Trending News