Kalaignar Magalir Urimmai Thogai: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது. உண்மையில், பெண்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் திட்டம் இந்தத் திட்டம் என்றாலும், இது தொடரக தமிழக அரசு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்கள் தொடர்பான தகவல்கள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் மாதம்தோறும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியான பயனாளர்களை உறுதி செய்யும் வகையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளர்களின் தரவுகள் மாதம்தோறும் ஆய்வு செய்யப்படுவதன் அவசியத்தை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.


மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?


குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் பணம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் தகுதிவாய்ந்த 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்யப்படும். 


மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க கடைசி நாள் நாளையா?


ஏனென்றால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட பயனாளி இறந்துவிட்டால், அது ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு, பயனாளி இறந்துவிட்டால் அது உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும். இதை உறுதி செய்ய இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவிருக்கிறது.


பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். 


பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை தொடர்பான தகவல்கள், அரையாண்டுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை காலாண்டுக்கு ஒருமுறை சரிபார்க்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க கடைசி நாள் நாளையா?


வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரிபார்க்கப்படும். இதுபோன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத்துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளை கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்தளிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


இந்த தகவல்களின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் தானாக புதுப்பிக்கப்படும். இப்படி புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.


பயனாளிகள் நீக்கம் தொடர்பாக முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலை இணையதளம் வழியாக ஒவ்வொரு மாதமும் 2ம் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இனி பாதி பேருக்கு 1000 ரூபாய் வராது... குண்டை தூக்கிப்போடும் குஷ்பு - காரணம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ