Kalaignar Magalir Urimmai Thogai: முதலமைச்சர் ஸ்டாலின் (M.K. Stalin) தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தது. குறிப்பாக, சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது மக்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஒன்றாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இருப்பினும், ஆட்சி அமைந்தும் கொரோனா காலம், பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் அமல்படுத்துவதில் காலத் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 2023-2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (TN Budget 2023) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் 2023ஆம் ஆண்டு செப். 15ஆம் தேதி அமலாகும் என அரசால் அறிவிக்கப்பட்டது.
மேலும், நடப்பு நிதியாண்டியேலே இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் (M. Karunanidhi) பெயரில், அதாவது 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' (Kalaignar Magalir Urimmai Thogai) என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டம் அமலாக்குவதற்கு முன் களத்தில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொண்டது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அவதிப்படும் மக்கள்! அதிர்ச்சி புகார் உண்மையா?
9 லட்சம் பேர் மேல்முறையீடு
தொடர்ந்து, இந்த உரிமைத் தொகையை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேலும், விண்ணப்பங்களை பெறவும், அதனை பூர்த்தி செய்து திட்டத்தில் பதிவு செய்யவும் இரண்டு கட்டமாக மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டன. விடுபட்டோர் இணையும் சிறப்பு முகாம்களும் நடந்தன. அதன்படி, திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அடுத்து முதற்கட்டமாக, விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இருப்பினும், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், மீண்டும் 9 லட்சம் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. செப்டம்பர், அக்டோபர் மாதத் தவணைகள் பயனர்களின் வங்கிக் கணக்கில் பிரதி மாதம் 14, 15ஆம் தேதிகளில் வரவு வைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு கூறுவது என்ன?
அந்த வகையில், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இனி வரும் காலங்களில் குடும்பத் தலைவிகள் பலருக்கும் ரூ.1000 நிறுத்தப்படும் வாய்ப்பிருப்பதாக பேசியுள்ளார். அதில்,"திமுக - காங்கிரஸ் கூட்டணி என்றாலே அது மக்களை ஏமாற்றும் கூட்டணியாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றனர், ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும்தான் என்றனர். அதுவும் ஆட்சிக்கு வந்து நீண்ட காலமாக அதனை கொண்டு வராமல் இருந்த அரசு, எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அதனை 2 ஆண்டுகளுக்கு பின் கொண்டு வந்தது.
முதலில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என்று சொன்ன அரசு இப்போது, வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படும் என்கின்றனர். அதாவது கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்களாம். இதன்மூலம், வருங்காலங்களில் பல பேருக்கு 1000 ரூபாய் நிறுத்தப்படும் என்பது தெரிகிறது. முதலில் அனைவருக்கும் என்றார்கள், பின் தகுதி உள்ளவர்களுக்கு என்றார்கள், தற்போது இது. இதையே தான் கர்நாடகாவிலும் செய்கின்றனர்" என கூறியுள்ளார்.
அரசு கூறுவது இதுதான்...
முன்னதாக, மகளிர் உரிமை திட்டத்தில் உள்ள 1.05 கோடி பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களது தகுதி உறுதிப்படுத்தப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்படும் என சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் - மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ