புதுடில்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC), தனது இ-கேட்டரிங் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. ரயில் பயணிகள் மதிய உணவு மற்றும் இரவு உணவை, முன் கூட்டியே ஆர்டர் செய்யலாம். நாளை, அதாவது பிப்ரவரி 1, 2021 முதல் இந்த சேவை மீண்டும் தொடங்க உள்ளது.  இந்தியாவில் COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இ-கேட்டரிங் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC இ-கேட்டரிங் சேவையை (IRCTC e-catering service)  2014 ஆம் ஆண்டு தொடங்கியது. IRCTC வலைத்தளமான www.ecatering.irctc.com - அல்லது தொலைபேசி மூலம்  உணவை ஆர்டர் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி இ-கேட்டரிங் சேவையை ‘ஃபுட் ஆன் ட்ராக்’ (‘Food on Track’)  செயலி மூலமும் பெறலாம்.


"கோவிட் நெருக்கடியின் போது இந்திய ரயில்வே தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்த இ-கேட்டரிங் சேவை இப்போது பிப்ரவரி 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பயணிகளுக்கு சிறந்த வகையில், கேட்டரிங் சேவை வழங்குவதற்காக பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிகளையும் கடைபிடித்து இந்த சேவை தொடங்கப்படும், "ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்தது.


முதல் கட்டமாக, புது தில்லி, லக்னோ, போபால், பாட்னா, சூரத், அகமதாபாத், புனே, ஹவுரா, விஜயவாடா, எர்ணாகுலம், உஜ்ஜைன் மற்றும் பன்வெல் உள்ளிட்ட 62 நிலையங்களில் இ- கேட்டரிங் சேவைகள் தொடங்கப்படும்.


ஐ.ஆர்.சி.டி.சி இ-கேட்டரிங் சேவையில் உணவை எவ்வாறு ஆர்டர் செய்வது:
1. பயணிகள் www.ecatering.irctc.com  இணைதளத்தில் இ-கேட்டரிங் சேவைகளைப் பெறலாம்.
2. தொலைபேசி மூலம்  இ- கேட்டரிங் சேவையில் ஆர்டர்கள் செய்யலாம். 1323 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் பயணிகள் இந்த சேவையைப் பெறலாம்.
3. பயணத்தின்போது சேவையைப் பெற பயணிகள் ‘ஃபுட் ஆன் ட்ராக்’ என்ற ஐ.ஆர்.சி.டி.சி பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யலாம்.
4. பயணிகளின் வசதிக்காக, ‘கேஷ் ஆன் டெலிவரி’ விருப்பமும் மீட்டமைக்கப்பட்டுள்ளது.
5. அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக ரயில்வே தற்போது ரயில்களில் ‘சாப்பிடத் தயார்’ உணவை மட்டுமே வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


ALSO READ |  Indian Railway வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை சுமக்கும் வேலை இல்லை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR