உடல்நல காப்பீடு... இரண்டு பாலிஸிகளில் ஒரே நேரத்தில் கிளைம் செய்யலாமா..!!
இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் க்ளைம் எடுக்கலாமா, முடியுமா, சாத்தியமா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் எழுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் காப்பீடு செய்வது மிகவும் அவசியம் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே இருக்கும் பாலிசியில் காப்பீட்டுத் தொகை குறைவாக இருந்தால் சிலர் வேறு பாலிசி எடுப்பதையும் காணலாம். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் க்ளைம் எடுக்கலாமா, முடியுமா, சாத்தியமா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் எழுகிறது.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் செய்வது எப்படி?
நீங்கள் இரண்டு வழிகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance) பாலிசியில் க்ளைம் செய்யலாம். முதலில்- மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பில் சமர்ப்பித்து க்ளெய்ம் பெறலாம். இரண்டாவது- நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், நீங்கள் பணமில்லா கிளைமிற்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் உங்கள் பணமில்லா கிளைம் (cashless claim) அங்கீகரிக்கப்பட்டவுடன், நீங்கள் காப்பீட்டு பாலிசியின் பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள்.
இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளைம் எடுக்கலாமா?
நீங்கள் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து உடல்நலக் காப்பீட்டைப் பெற்றிருந்தால், ஒரே ஒரு காப்பீட்டுக் பாலிஸியின் மட்டுமே உங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பணமில்லா கிளைம் பலனைப் பெற முடியும். இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஒரே நேரத்தில் பணமில்லா க்ளெய்மின் பலனை நீங்கள் பெற முடியாது. அதே நேரத்தில், உங்கள் காப்பீட்டுத் தொகையை விட க்ளைம் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள பில் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.
மேலும் படிக்க | உங்கள் பெற்றோருக்கான சிறந்த மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுக்க...!
அதே நேரத்தில், உங்களிடம் ஒரே நிறுவனத்தின் இரண்டு வெவ்வேறு காப்பீட்டு பாலிஸிகள் இருந்தால், நீங்கள் நிறுவனத்துடன் பேசி, இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஒன்றாக க்ளைம் செய்ய முடியுமா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். இது தொடர்பாக நிறுவனங்கள் பல்வேறு விதிகளை வைத்திருக்கிறது. இதனால், அதற்கு ஏற்றவாறு, விஷயங்களை தெளிவுபடுத்தி கொண்ட பின் இரு காப்பீட்டுகளை எடுத்துக் கொள்ளவது சிறந்தது.
இரண்டு வெவ்வேறு உடல்நலக் காப்பீட்டுக் பாலிசிகளை எடுப்பது சரியா?
இரண்டு வெவ்வேறு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கிறது மற்றும் அவசர காலங்களில் க்ளெய்ம் எடுக்கும்போது இக்கட்டான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தேவைக்கேற்ப ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது எப்போதுமே நல்லது, அதில் பணமில்லா க்ளெய்ம்களுடன் மற்ற எல்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நன்மைகளையும் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... 2024 ஜனவரி முதல் புதிய விதி அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ