இன்றைய காலகட்டத்தில், மருத்துவ காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது. இந்நிலையில், அதற்கான விதிகள் மாறுவது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. ஜனவரி 1, 2024 முதல் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், மருத்துவ காப்பீடு வாங்குவது தொடர்பான புதிய விதி அமலுக்கு வர உள்ளது. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ். சுகாதார காப்பீட்டை வாங்கும் போது, மாறி வரும் புதிய விதிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் 30, 2023 அன்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது, அதில் அனைத்து சுகாதார காப்பீட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர் தகவல் தாளை (Customer Information Sheet - CIS) கட்டாயமாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. காப்பீடு தொடர்பான அடிப்படை அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிமையான வார்த்தைகளில் கூறுவதே இதன் நோக்கம்.
CIS என்றால் என்ன?
CIS ஆனது வாடிக்கையாளர் தகவல் தாள் (Customer Information Sheet) என்றும் அழைக்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு பாலிஸியின் (Health Insurance) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அதில் எழுதப்பட்டிருக்கும். புதிய சுற்றறிக்கையின்படி, இப்போது அனைத்து சுகாதார காப்பீட்டு நிறுவனங்களும் பாலிசியை வழங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு CIS வழங்க வேண்டும். இதில் கவரேஜ், காத்திருப்பு காலம், வரம்பு, ப்ரீ லுக் ரத்து செய்தல், உரிமைகோரலை எடுக்கும் முறை மற்றும் தொடர்பு போன்றவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்.
வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், வாடிக்கையாளர்களுக்கு CIS வழங்கிய பிறகு, நிறுவனங்கள் தங்கள் சார்பாக CIS பெறப்பட்டதாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறுகிறது. இதன் மூலம், காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் தங்கள் பாலிசி பற்றிய சிறந்த தகவல்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிஸி பிடிக்கவில்லை என்றால் பாலிசியைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய சுற்றறிக்கையின்படி, பாலிசியை வாங்கிய பிறகு, ஒரு வாடிக்கையாளர் அதை விரும்பவில்லை என்றால், அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் அதைத் திருப்பித் தரலாம். இது வாடிக்கையாளர்களுக்கு இது மிக பெரிய நன்மையை அளிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள், தங்கள் எதிர்பாஅர்ப்பிற்கு ஏற்றபடி பாலிசி இல்லை என்றால், அவர்கள் அதைத் திருப்பித் தரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ