கோடக் மஹிந்திரா வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியாகும்.  தொடக்க காலத்தில் நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம் வங்கியாக உருவெடுத்தது, நிதி நிறுவனம் வங்கியாக மாறுவது இதுவே முதல் முறையாகும்.  ஒவ்வொரு வங்கிகளிலும் பணி சீரமைப்பு காரணமாக ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரம் வரை வங்கியின் பண பரிவார்த்தனை செயல்களை சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கும்.  அதேபோல தற்போது கோடக் மஹிந்திரா வங்கியும் சிறிது நேரம் வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Employment vs Corna: வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு காரணமாகும் கொரோனா வைரஸின் வீழ்ச்சி


கோடக் மஹிந்திரா வங்கியானது டெபிட் கார்டு/ ஸ்பென்ட்ஸ் கார்டு சேவைகள் குறிப்பிட்ட மணி நேரம் செயல்படாது என்று அதன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பியுள்ளது.  அதன்படி இந்த வங்கியின் டெபிட் கார்டு சேவையானது மே-15,2022 அன்று காலை 0:00 முதல் அதிகாலை 02:00 வரையிலும்(ஐஎஸ்டி), அடுத்ததாக அதிகாலை 03:00 மணி தொடங்கி காலை 06:00 மணி வரையிலும்(ஐஎஸ்டி) நிறுத்தப்படும்.  இந்த நேரத்தில் மேலும் சில சேவைகள் இயங்காது, அவை என்னென்னவென்று இப்போது காண்போம்.



ஏடிஎம், பிஓஎஸ், இ-காம், கியூஆர், பேமெண்ட் டோக்கனைசேஷன், கார்டு இல்லாமல் பணம் எடுப்பது, பின் அங்கீகாரம், பின் ஜெனரேஷன், கார்டுகளை பிளாக் அல்லது அன்பிளாக் செய்தல், பணம் டிரான்ஸாக்ஷன் செய்வது, ஆக்டிவேஷன் அல்லது டீஆக்டிவேஷன் போன்ற எந்த சேவையையும் வடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாது.  இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அன்புள்ள வாடிக்கையாளர்களே, வங்கி சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு தவணையாக 0:00 முதல் அதிகாலை 02:00 வரையிலும், அடுத்ததாக அதிகாலை 03:00 மணி தொடங்கி காலை 06:00 மணி வரையிலும் வங்கியின் சேவைகள் நிறுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | HDFC வங்கியின் எக்ஸ்பிரஸ் கார் லோன்; அரை மணி நேரத்தில் கார் கடன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR