Aadhaar Card Free Update Process And Deadline: ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது, இது மக்கள்தொகை (குடியிருப்பு முகவரி தகவல்) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (புகைப்படம், கருவிழி-ஸ்கேன், கைரேகைகள்) புகைப்படத்துடன் சேமிக்கிறது. அதேபோல் ஆதார் எண் என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். வழங்கப்பட்ட ஒவ்வொரு ஆதார் எண்ணும் ஒரு தனிநபருக்கு தனிப்பட்டதாக இருக்கும், மேலும் அவை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். மேலும் இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆதார் அடையானது வங்கிப் பணி முதல் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்து வேலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணம் ஆகும். இந்த அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், உங்களது வேலையில் தடங்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வேண்டுமானால் இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆவணங்களை புதுப்பிக்கும் இந்த வசதியை UIDAI இலவசமாக வழங்குகிறது.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ


உங்கள் ஆதார் அட்டையை இலவசமாக எப்போது வரை புதுப்பிக்க முடியும்?
10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI தற்போது வழங்கியுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில், இந்தச் சேவையை இலவசமாகப் பயன்படுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 14 இல் இருந்து ஜூன் 14, 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், எந்தக் கட்டணமும் செலுத்தாமல் புதுபிக்கலாம்.


ஆதார் அட்டை விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
* நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ இல் உள்நுழைய வேண்டும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள "My Aadhaar" போர்ட்டலுக்குச் சென்று தொடரவும்.
* ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
* உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, சரியான பெட்டியைத் தேர்வு செய்யவும்.
* ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து அடையாள ஆவணத்தைத் தேர்ந்தெடுத்து ஆவணத்தைப் பதிவேற்றவும்.



கட்டணம் எப்போது செலுத்த வேண்டியிருக்கும்?
இந்த இலவச புதுப்பிப்பு சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆதார் அல்லது சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று இந்தச் சேவையைப் பெற விரும்புவோர், தங்களின் விவரங்களைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ