Aadhaar Card Photo Change Process: "ஆதார் அட்டை" என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது, இது மக்கள்தொகை (குடியிருப்பு முகவரி தகவல்) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (புகைப்படம், கருவிழி-ஸ்கேன், கைரேகைகள்) புகைப்படத்துடன் சேமிக்கிறது. அதேபோல் ஆதார் எண் என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். வழங்கப்பட்ட ஒவ்வொரு ஆதார் எண்ணும் ஒரு தனிநபருக்கு தனிப்பட்டதாக இருக்கும், மேலும் அவை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். மேலும் இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது.
இந்த ஆதார் அடையானது வங்கிப் பணி முதல் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்து வேலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணம். இந்த அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், உங்களது வேலையில் ஏதேனும் தடைபடலாம். குறிப்பாக ஆதார் அட்டையில் இருக்கும் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்கள் மிகவும் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். யுஐடிஏஐ படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை நாம் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பெயர், முகவரி அல்லது பிற தகவல்களை இது போன்ற நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஆதார் கார்டில் இருந்து புகைப்படத்தையும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆம், உங்களது ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி ஆதாரில் இருந்து பழைய புகைப்படத்தை எளிதாக நீக்கிவிட்டு புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம், ஆனால் எப்படி? இதோ இதற்காக விடையை இந்த பதிவில் காண்போம்.
வீட்டில் அமர்ந்த படி ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்று சாத்தியமா?
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை வீட்டில் அமர்ந்த படி மாற்ற முடியா என்கிற கேள்வி உங்களுக்கும் இருந்தால்? இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் படி, புகைப்படத்தை ஆதார் அட்டையிலிருந்து மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம், ஆனால் இந்த செயல்முறையை வீட்டில் இருந்த படி முடியாது. இதற்கு நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். இருப்பினும், ஆதாரில் இருந்து புகைப்படத்தை மாற்றுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் புகைப்பட மாற்ற படிவத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
* UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
* இங்கே உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
* உள்நுழைந்த பிறகு, ஆதார் பதிவுப் படிவம் உங்களுக்குக் தென்படும்.
* ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.
ஆதார் அட்டையில் இருந்து புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்லவும். இங்கே படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை மீண்டும் சரிபார்க்கவும். அதன் பிறகு, 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் புதிய புகைப்படம் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் முறையைப் பின்பற்றுவதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட ஆதாரை புகைப்படத்துடன் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க | PAN Aadhaar Link: ‘இவர்கள்’ பான் - ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ