LIC Employees Salary Hike: எல்ஐசி ஊழியரா நீங்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் எல்ஐசி ஊழியர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (Life Insurance Corporation of India) ஊழியர்களுக்கு மத்திய அரசாங்கம் ஒரு மிகப்பெரிய பரிசை அளித்துள்ளது. எல்ஐசி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 17 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் எல்ஐசி ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மக்களவைத் தேர்தலுக்கான (Lok Sabha Election) தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். ஆகையால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே எல்ஐசி ஊழியர்களுக்கு (LIC Employees) மோடி அரசு இந்த பெரிய பரிசை வழங்கியுள்ளது. 


எல்ஐசி ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது


ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சுமார் 1.10 ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் ஹோலி பண்டிகைக்கான மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஊழியர்களின் ஊதியத்தில் மொத்தமாக 17 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவால் சுமார் 1,10,000 -ஐ விட அதிகமான ஊழியர்களும் சுமார் 30,000 ஓய்வூதியதாரர்களும் நேரடியாக பயன்பெறுவார்கள்.


வங்கி ஊழியர்கள்


சமீபத்தில் வங்கி ஊழியர்களின் (Bank Employees) ஊதியம் அதிகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து இப்பொழுது எல்ஐசி ஊழியர்களின் ஊதியத்திலும் பம்பர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பள உயர்வு நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். மேலும், அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. புதிய வேலை நேரம் குறித்த அரசின் அறிவிப்பு வந்தவுடன் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் வாங்க ரூ.50000 வரை மானியம்... தள்ளுபடியும் உண்டு.. முழு விபரம்!


எல்ஐசி ஊழியர்களின் ஊதிய உயர்வு எப்போது அமலுக்கு வரும்?


எல்ஐசி ஊழியர்களின் ஊதிய உயர்வு 2022 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. எல் ஐ சி பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 4000 கோடி செலவாகும். ஊதியம் உயர்த்தப்பட்ட பிறகு எல்ஐசி ஊழியர்களுக்கான ஊதிய செலவு 29 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.


மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commisison) பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்கள் மாநில ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி சம்பளத்தை உயர்த்தின. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்தியுள்ளன.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு EPFO அளித்த நிவாரணம்: இவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ