LIC Jeevan Anand Scheme: உங்கள் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்களும் நல்ல வருமானத்தைப் பெற முடியும். எல்ஐசி அதாவது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மீது பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எல்ஐசி இன்சூரன்ஸ் அல்லது பாலிசி பாதுகாப்புக்காகவும் நல்ல வருமானத்தை தருவதாகவும் இருப்பதால் பலரும் இதில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலருக்கும் ஏற்ற சிறந்த திட்டங்கள் உள்ளது. தற்போது எல்ஐசி ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது அது தான் எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசி. இதில் தினமும் ரூ.45 மட்டும் செலுத்தினால் இறுதியில் ரூ.25 லட்சம் பெறலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது


ஜீவன் ஆனந்த் பாலிசி மூலம் தினசரி வெறும் 45 ரூபாயை சேமித்து ஒருவர் ரூ.25 லட்சம் நிதியை பெற முடியும். மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் அதிக வருமானம் தருவதாக இந்த பாலிசி உள்ளது. இது ஒரு டேர்ம் பாலிசி திட்டமாகும், இதில் முதிர்வு நன்மையும் பாலிசிதாரருக்கு வழங்கப்படும். இதில், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம் ஆகும் மற்றும் அதிகபட்சமாக எந்த வரம்பும் இல்லை. ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒருவேளை பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு 125 சதவீத இறப்பு பலன்கள் கிடைக்கும். மேலும் இதில் வரி விலக்கு பலன் தரப்படவில்லை. இந்த ஜீவன் ஆனந்த் பாலிசியில், விபத்து பலன் ரைடர், புதிய கிரிட்டிக்கல் பெனிபிட் ரைடர், புதிய டேர்ம் இன்சூரன்ஸ் ரைடர் மற்றும் விபத்து மரணம் மற்றும் இயலாமை ரைடர் ஆகிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி கணக்கீடு


எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் ரூ.1358 டெபாசிட் செய்ய வேண்டும், அதன் பிறகு இறுதியில் ரூ.25 லட்சம் பெறலாம். இந்த திட்டத்தில் தினமும் ரூ.45 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இது ஒரு வகையான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும், இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியில் நீங்கள் 35 வருடங்கள் முதலீடு செய்தால், முதிர்ச்சியடைந்த பிறகு உங்களுக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்படும். இந்த பாலிசியில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.16,300 வரை சேமிக்க முடியும். எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் போனஸ் இரண்டு முறை வழங்கப்படுகிறது, ஆனால் இதற்கு உங்கள் பாலிசி 15 வருடங்களாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | ரூ.20 ஆயிரத்தில் தொடங்கிய தொழில்-இப்போ 200 கோடி மதிப்பு! இந்த கதையை படிங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ