ரூ.20 ஆயிரத்தில் தொடங்கிய தொழில்-இப்போ 200 கோடி மதிப்பு! இந்த கதையை படிங்க..

சுமார் ரூ.20 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த நிறுவனம் ஒன்று தற்போது ரூ.200 கோடி வரை சொத்து மதிப்புடன் இருக்கிறது. அந்த நிறுவனம் குறித்தும் அந்த தொழிலை தொடங்கியவர் குறித்தும் இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 4, 2024, 05:38 PM IST
  • 20 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில்
  • இப்போது 20 கோடி வரை வருமானம்
  • இந்த சூப்பர் கதையை படிங்க..
ரூ.20 ஆயிரத்தில் தொடங்கிய தொழில்-இப்போ 200 கோடி மதிப்பு! இந்த கதையை படிங்க.. title=

இந்தியாவை பொறுத்த வரை, கடந்த சில ஆண்டுகளாக சுய தொழில்கள் அதிகமாக பெருகி வருகின்றன. இதற்கு காரணம், இளைஞர்கள் பலருக்கு சுய தொழில் செய்து முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் பெருகி வருகிறது. இதனால் நாட்டின் வருமானம் பெருகுவதோடு, தனி நபரின் வருமானமும் பெருகும். அந்த வகையில் ஒரு சில தொழில்கள், கையில் இருக்கும் சில ஆயிரங்களை வைத்து மட்டும் ஆரம்பிக்கப்படும். ஆனால், அதை ஆரம்பித்தவர்கள் முழு முயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக அந்த தாெழில் பெரிய உயரத்தை அடைந்து பல கோடி சம்பாதிக்கவும் செய்யும். 

ரூ.20 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில்..

வாயில் எச்சில் ஊற வைக்கும் கிரில் பர்கரை தொழிலை ஆரம்பித்தவர், பிரஜா ராவுத். இவர், இந்த தொழிலை வெறும் ரூ.20 ஆயிரத்தில் ஆரம்பித்திருக்கிறார். ஐடி ஊழியரான இவர், பெங்களூருவில் பணியாற்றி வந்தார். 21வயதாக இருந்த போது முஹ்டன் முறையாக துரித உணவான பர்க்கரை சுவைத்து பார்த்திருக்கிறார். இதன் சுவை அவர் நாக்கில் ஒட்டிக்கொள்ள, பர்க்கரே இவரது விருப்பமான உணவாக மாறியிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, பர்கர்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடையதாக இருக்கிறது. இது குறித்து யோசித்த ராவுத், நாம் இதை மாற்ற வேண்டும் என்று யோசித்திருக்கிறார். 

இதை மாற்றியமைக்க வேண்டி, பர்கர் உணவகத்தை திறக்க வேண்டும் என யோசித்திருக்கிறார். யோசித்தது போலவே ஒரு உணவகத்தை திறந்து, அதற்கு Biggies Burger என்று பெயரும் வைத்திருக்கிறார். ஒரு பிரபலமான ஐடி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், அந்த வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக தனது உணவகத்தை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். 

மேலும் படிக்க | ஹோட்டல் ரூம் தேடி அலைய தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனில் 100 ரூபாய்க்கு தங்கலாம்

இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்ன தெரியுமா? ராவுத்திற்கு இந்த தொழிலை ஆரம்பிக்கும் வரை அவருக்கு சமையலே தெரியாதாம். யூடியூப் வீடியோக்களை பார்த்து பர்க்கர் செய்ய கற்றுக்கொண்ட இவர், தனது தொழிலில் சுமார் 20 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். இதில் இருந்து லாபம் வருமா அல்லது நஷ்டம் வருமா என்பது குறித்து கவலைப்படாமல் இறங்கியிருக்கிறார்.

200 கோடியை தாண்டிய மதிப்பு..

20ஆயிரத்தில் நிறுவனத்தை தொடங்கிய இவரே தனக்கு இவ்வளவு வருமானம் வரும் என்று யோசித்திருக்க மாட்டார். ஆனால், நிறுவனத்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே இந்தியா முழுவதும் Biggies Burger நிறுவனத்தின் கிளைகளை ஆரம்பித்திருக்கிறார். கடந்த ஆண்டின் (2023) நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.100 கோடி வரை எட்டியது. இந்த ஆண்டு, அந்த நிறுவனத்தின் மதிப்பு, சுமார் ரூ.200 கோடியை எட்டியிருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News