எல்ஐசி பாலிசி: ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு  ஓய்வு காலத்தில் பணத்தைப் பற்றிய கவலையோ அல்லது வேறு தலைவலியோ இல்லாமல், நாம் அனைவரும் வசதியான வாழ்க்கையை விரும்புகிறோம். இருப்பினும், இதற்கான திட்டத்தை இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரு நல்ல திட்டத்தில் சேமிப்பது அல்லது முதலீடு செய்வது மிகவும் முக்கியம். பெரும்பாலான மக்களின் முதலீடுகள் ஓய்வூதியத் திட்டத்தை நோக்கியே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். எல்ஐசியின் சிறந்த பாலிசிகளில் ஒன்றான சாரல் பென்ஷன் திட்டத்த்தின் மூலம் நீங்கள் ஓய்வு காலத்திற்கான வருமானத்தை சிறப்பாக திட்டமிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசியின் சரல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?


பென்ஷன் வசதி இல்லாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடம் மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல்  (Retirement Planning) என்று வரும் போது, ​​LIC (Life Insurance Corporation) என்ற பெயர் கண்டிப்பாக வரும். எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஒன்று - எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா (LIC Saral Pension Yojana). பழமையான மற்றும் நம்பகமான எல்ஐசி நிறுவனத்தின் சாரல் ஓய்வூதியத் திட்டம் ஒரு சிறந்த வருமானத்தை கொடுக்கும் பாலிஸியாகும். இது இணைக்கப்படாத மற்றும் ஒற்றை பிரீமியம் திட்டமாகும். கணவன் அல்லது மனைவி இணைந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதே சமயம், ஒருவர் தனியாகவும் முதலீடு செய்யலாம். இதில், பாலிசி தொடங்கிய 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர் விரும்பினால் சரண்டர் செய்யலாம்.


LIC சாரல் பென்ஷன் யோஜனா தகுதி


சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்.
இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வயது 80 ஆகும்.


மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்


முதலீட்டாளர்கள் இதில் கூட்டு அல்லது தனிக் கணக்கையும் திறக்கலாம்.


இத்திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறலாம்.


மாதாந்திர ஓய்வூதியத்திற்கு, நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.


காலாண்டு ஓய்வூதியத்திற்கு, நீங்கள் குறைந்தபட்சம் 3000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.


அரையாண்டு ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்சம் ரூ.6000 முதலீடு செய்ய வேண்டும்.


வருடாந்திர ஓய்வூதியத்திற்கு, குறைந்தபட்சம் 12000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.


அதிகபட்ச ஓய்வூதியத் தொகைக்கு வரம்பு இல்லை.


LIC சாரல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர்


42 வயதில் சாரல் பென்ஷன் திட்டத்தில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.12,388 வரை ஓய்வூதியமாகப் பெறலாம். அதிக முதலீட்டில் அதிக ஓய்வூதியம் பெறலாம்.


எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா நன்மைகள்


1. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பயனாளிகள் கடனைப் பெறலாம்.


2. இந்தத் திட்டத்தைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


3. நோய்வாய்ப்பட்டதன் காரணமாக பணம் தேவைப்பட்டால், திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறலாம்.


4. பாலிசியை ஆரம்பித்த 6 மாதங்களுக்குள் நீங்கள் சரண்டர் செய்யலாம்.


5. சரண்டர் செய்தால், அடிப்படை விலையில் 95% திரும்பப் பெறப்படும்.


மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ