LIC முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி: இதுவரை இல்லாத கீழ் மட்டத்தில் எல்ஐசி பங்கு விலை
LIC Share Price: எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்று மீண்டும் வீழ்ந்து இதுவரை இல்லாத கீழ் மட்டத்தை எட்டியது எல்ஐசி பங்கு விலை.
எல்ஐசி பங்கு விலை: எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்று மீண்டும் வீழ்ந்து இதுவரை இல்லாத கீழ் மட்டத்தை எட்டியது எல்ஐசி பங்கு விலை.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) பங்குகள், என்எஸ்இயில், காலை 10:15 மணி நிலவரப்படி, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.760 என்ற மிக குறைவான விலையில் வர்த்தகத்தில் இருந்தது. ஒரு பங்கின் வெளியீட்டு விலையான ரூ.949 உடன் ஒப்பிடும் போது, பங்கு ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.200 குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில், இந்நிறுவனத்தின் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.761.7 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. பிஎஸ்இயின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, சந்தை மூலதனம் (மார்கெட் கேப்), ரூ. 4,81,775 கோடியாக இருந்தது. இது அசல் மதிப்பான ரூ. 6 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி குறைவாகும்.
இந்திய பங்குச் சந்தை கீழ்நோக்கிலேயே உள்ளது. காலை 10:20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 500 புள்ளிகள், அதாவது சுமார் 1 சதவீதம் சரிந்து 55,133 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. பங்குச் சந்தை குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் 26 பங்குகளின் விலைகள் குறைந்திருந்தன. டைட்டன் மற்றும் டாக்டர் ரெட்டி அதிக நஷ்டம் அடைந்த பங்குகளாக இருந்தன. என்டிபிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ், பவர் கிரிட் ஆகிய பங்குகள் மட்டுமே பச்சை நிறத்தில், அதாவது ஏற்றத்தில் இருந்தன.
மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ
தேசிய பங்குச்சந்தையான என்எஸ்இ-இல், NIFTY50 151 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 16,450க்கு கீழ் சென்றது. டைட்டன், டாக்டர் ரெட்டி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அதிக நஷ்டமடைந்த பங்குகளாக இருந்தன. நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 பங்குகளில் 42 பங்குகள் சரிந்தன.
ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா ஆகியவை குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக இருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கம் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளிலும் காணப்பட்டது.
பட்டியலிடப்பட்டதில் இருந்து எல்ஐசி பங்கு விலை வீழ்ச்சியில் உள்ளது
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் பங்கின் விலை இந்த ஆண்டு மே 17 அன்று பட்டியலிடப்பட்டதிலிருந்து சரிந்து வருகிறது. நிறுவனத்தின் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.949 ஆக இருந்தது. இது ஒரு பங்குக்கு ரூ.865 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்டதிலிருந்து எல்ஐசி பங்கு பல முறை மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புக்கு முன் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூன் 6 மற்றும் 8 க்கு இடையில் அதன் நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்தும். அதிக பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கி ரெப்போ விகிதம் மற்றும் பிற வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்தது.
நிதிக் கொள்கை அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், இந்த வாரம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு குழப்பங்களும் சவால்களும் நிறைந்த வாரமாக இருக்கும். எல்ஐசி பங்கில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களுக்கும் நெருக்கடியான வாரமாகவே இது இருக்கும். எல்ஐசி பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR