LPG Cylinder Price: குட் நியூஸ்!! குறைந்தது எல்பிஜி சிலிண்டர் விலை.... இன்று முதல் புதிய விலை
LPG Cylinder Price Reduced: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளன. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
LPG Cylinder Price Reduced: புத்தாண்டுக்கு முன்பே மக்களுக்கு அரசிடம் இருந்து பரிசு கிடைத்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி சிலிண்டரின் விலையை அரசு குறைத்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.39 குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.1796.50 ஆகவும், மும்பையில் ரூ.1749 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1908 ஆகவும், சென்னையில் ரூ.1968.50 ஆகவும் இருந்தது. தற்போது இந்த விலை ரூ.39 குறைந்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்துள்ளது
அரசு 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் (LPG Cylinder) விலையை ரூ.39 குறைத்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலை குறைப்பிற்கு பிறகு வர்த்தக சிலிண்டர் டெல்லியில் ரூ.1757.50க்கும், கொல்கத்தாவில் ரூ.1869க்கும், மும்பையில் ரூ.1710க்கும், சென்னையில் ரூ.1929.50க்கும் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளன. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த திருத்தமானது, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக ரீதியான சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும்.
வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம்
முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகது. அப்போது சிலிண்டர் விலை ரூ.21 உயர்த்தப்பட்டது. அதேசமயம், அதற்கு முன் நவம்பர் 16ஆம் தேதி வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் (Commercial LPG Cylinmder) விலையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் காணப்படுகின்றன. அவ்வப்போது சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது இதில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 5% டிஏ ஹைக்கை நோக்கி செல்லும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் உள்ளதா?
வணிக ரக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆகஸ்ட் முதல் அதன் விலை மாற்றப்படாமல் உள்ளது. கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் (Domestic LPG Cylinder) விலை ரூ.200 குறைக்கப்பட்டது. இந்தியன் ஆயில் இணையதளத்தின்படி, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.903, கொல்கத்தாவில் ரூ.929, மும்பையில் ரூ.902.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றங்களை செய்கின்றன. இவை பொதுவாக மாதத்தின் முதல் நாளில் மாற்றப்பட்டாலும், பல நேரங்களில் இவை மற்ற தேதிகளிலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றி அமைக்கின்றன.
மேலும் படிக்க | SBI அம்ரித் கலஷ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் நீட்டிக்கப்பட்டது! யாரெல்லாம் பயனடையலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ