SBI ​அம்ரித் கலஷ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் நீட்டிக்கப்பட்டது! யாரெல்லாம் பயனடையலாம்?

SBI Amrit Kalash Deposit Scheme: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதிக வட்டி விகிதங்களுடன் கூடிய சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான "அம்ரித் கலாஷ் வைப்புத்தொகை" திட்டத்தை நீட்டித்துள்ளது

பாரத ஸ்டேட் வங்கியின் 400 நாட்கள் எஃப்டி திட்டம், பிப்ரவரி 15, 2023 அன்று துவங்கப்பட்டது. இந்த சிறப்புத் திட்டம் மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

1 /8

உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எஸ்பிஐ அம்ரித் கலஷ் டெபாசிட் திட்டம், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதமும் மற்றவர்களுக்கு 7.1 சதவீதமும் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது

2 /8

இந்தத் திட்டம் பொது வகை முதலீட்டாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் கிடைக்கும். இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

3 /8

எஸ்பிஐ இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்ட விண்ணப்பத்திற்கான காலக்கெடுவை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்தது. 400 நாள் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15, 2023 முதல் டிசம்பர் 31, 2023 என்று SBI தெரிவித்திருந்தது.

4 /8

தற்போது வங்கியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, SBI சிறப்பு FD திட்டத்தில் 7.60 சதவீத வட்டி விகிதங்களுடன் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2024 ஆகும்.

5 /8

உள்நாட்டு சில்லறை டெர்ம் டெபாசிட்டுகள், என்ஆர்ஐ டேர்ம் டெபாசிட்கள் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை ஏற்கப்படும்

6 /8

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி செலுத்தும் செயல்முறை, மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு விருப்பங்கள் என மூன்று வழிகள் உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு விருப்பமான டெபாசிட் காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையும் உண்டு

7 /8

வட்டி முதிர்வு காலத்தில் முதிர்வுத் தொகையுடன் சேர்த்தும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரிச் சட்டத்தின்படி டிடிஎஸ் விதிமுறைகள் பொருந்தும். 

8 /8

இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்த தொகைக்கு எதிராக தேவைப்பட்டால் கடன் பெறலாம்.  மேலும் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கும் வங்கி உதவுகிறது.