Changes From May 1: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். ஒரு சில நேரங்களில் இந்த மாற்றங்கள் நன்மை பயக்கும் விதமாகவும், ஒரு சில மாற்றங்கள் சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. ஏப்ரல் மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல மாற்றங்கள் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன.  எல்பிஜி கேஸ் சிலிண்டரில் இருந்து ஜிஎஸ்டி வரை பல முக்கிய விஷயங்களில் மாற்றங்கள் வர உள்ளது. மே 1ம் தேதி முதல் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..


எல்பிஜி சிலிண்டர் விலை


இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலை மாறும். எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து வருகின்றன. சமீபத்தில் 14 கிலோ கொண்ட உள்நாட்டு மற்றும் 19 கிலோ கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் டெல்லியில் ரூ.2253க்குக் கிடைத்த காஸ் சிலிண்டரின் விலையை ரூ.2028க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மே 1 முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


வங்கி தொடர்பான விதிகள்


யெஸ் வங்கியின் அறிவித்துள்ளதுபடி, பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச சராசரி இருப்பு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ப்ரோ மேக்ஸ் அக்கவுண்ட்டுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகை ரூ.50 ஆயிரமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச கட்டணத்திற்கு ரூ.1,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது சேவிங் அக்கவுண்ட் ப்ரோ பிளஸ், யெஸ் எசென்ஸ் எஸ்ஏ, யெஸ் ரெஸ்பெக்ட் எஸ்ஏ ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.25 ஆயிரமாக மாற்றப்பட்டுள்ளது.  இந்தக் கணக்கிற்கான கட்டணங்களின் அதிகபட்ச வரம்பு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சேமிப்புக் கணக்குப் புரோவில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.10,000 ஆக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மே முதல் தேதி முதல் அமலுக்கு வரும்.


மூத்த குடிமக்களுக்கான FD


HDFC வங்கியால் வழங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD திட்டமாகும், இதில் அதிக வட்டி விகிதங்களின் பலன் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. மே 2020ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மே 10, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஐசிஐசிஐ வங்கி கட்டணம்


ஐசிஐசிஐ வங்கி, சேமிப்புக் கணக்கு தொடர்பான சேவைக் கட்டண விதிகளையும் மாற்றியுள்ளது. இப்போது டெபிட் கார்டுக்கு, வாடிக்கையாளர்கள் ஆண்டுக் கட்டணமாக நகர்ப்புறங்களில் ரூ.200 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.99 செலுத்த வேண்டும். மேலும், வங்கியின் முதல் 25 பக்க காசோலைக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், இதற்குப் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.4 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த மாற்றங்கள் மே 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று வங்கி தனது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ