ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்?

தேசிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, பஞ்சாப் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2024, 03:29 PM IST
  • கிராமப்புறம் மற்றும் நகரத்தை பொறுத்து மாறும்.
  • நகர்புறங்களில் அதிக தொகை பராமரிக்க வேண்டும்.
  • இல்லை என்றால் அபராதங்கள் விதிக்கப்படும்.
ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்? title=

Savings Account: வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி வைத்திருக்காத பட்சத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதங்களை வசூலிக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். ஆனால் பலருக்கும் இது குறித்த முறையான தகவல் தெரிவதில்லை. பலரும் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தேவைகளைப் பற்றி அறியாமல் ஒவ்வொரு மாதமும் அபராத தொகையை செலுத்தி வருகின்றனர்.  சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். தனியார் வங்கி முதல் அரசு வங்கி வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!

பாரத ஸ்டேட் வங்கி

தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார் போல மினிமம் பேலன்ஸ் மாறுபடும். நீங்கள் ஒரு மெட்ரோ வசிக்கிறீர்கள் என்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 3,000 இருக்க வேண்டும். அதே சமயம் சிறிய நகரத்தில் உங்கள் வங்கி இருக்கிறது என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 2,000 வைத்திருக்க வேண்டும்.  கிராமப்புற வங்கியில் கணக்கு இருந்தால், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 1,000 இருக்க வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதியில் நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், கிராமப்புறங்களில் வங்கி கணக்கு இருந்தால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.

YES வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா

YES வங்கியில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வாடிக்கையாளரிடமிருந்து ஒரு மாதத்திற்கு ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும். கோடக் மஹிந்திரா வங்கியில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையாக ரூ. 10,000 பராமரிக்க வேண்டும்.  

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மெட்ரோ நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5,000 முதல் ரூ. 2,000 வைத்திருக்க வேண்டும்.  

HDFC வங்கி

HDFC வங்கியில் நகர்ப்புற மற்றும் மெட்ரோ இடங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5,000 முதல் ரூ. 2,500 வரை வைத்திருக்க வேண்டும்.

IndusInd Bank

IndusInd வங்கியில் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். கிராமப்புற வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News