வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..

Second Hand Books Business : புத்தக பிரியர்களுக்கு நற்செய்தி! உங்கள் பழைய புத்தகங்களை வைத்து லட்ச லட்டசமாக சம்பாதிக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ‘இவர்களின்’ கதையை படியுங்கள்..  

Written by - Yuvashree | Last Updated : Apr 21, 2024, 06:26 PM IST
  • பழைய புத்தகங்களை வைத்து தொடங்கப்படும் தொழில்
  • இதிலிருந்து லட்சங்களில் லாபம் பார்க்கலாம்
  • கிதாப்வாலா பற்றி உங்களுக்கு தெரியுமா?
வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்.. title=

Second Hand Books Business :  புத்தகம் எழுதுவது எப்படி ஒரு கலையோ, அதே போல புத்தகங்களை படிப்பதும் ஒரு தனி கலையாகும். புத்தக பிரியர்கள் பலர், வீட்டின் ஷோக்கேஸ்களில் விதவிதமான புத்தகங்களை அடுக்கி வைத்து அழகு பார்க்க விரும்புவர். ஆனால், அனைவருக்கும் தாங்கள் வாங்கும் புத்தகங்களை அடுக்கி வைக்கும் அளவிற்கு வசதி இருப்பதில்லை. எனவே, சிலர் அதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் மூலமாகவோ விற்று விடுவர். அந்த வகையில், போட்டி தேர்வுக்கு படித்த மாணவர்கள் இருவர், தனக்கு அடுத்த சங்கதி மாணவர்கள் வளர வேண்டும் என்பதற்காக ஒரு புது முயற்சியை எடுத்து, பழைய புத்தகங்களை விற்பது மூலம் தற்பாேது லட்சங்களில் லாபம் பார்த்து வருகின்றனர். 

கிதாப் வாலா:

பீகார் மாநிலத்தில் உ ள்ள ராம்ச்ஹந்திரபூர் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர், அக்‌ஷய் காஷ்யப். மிகவும் ஏழை நிலை குடும்பத்தை சேர்ந்த இவர், சிறு வயதில் இருந்தே தனது படிப்பிற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு சிரமப்பட்டிருக்கிறார். விவசாயியான இவரது தந்தை படிப்புதான் முக்கியம் என்று தனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்ததாக கூறுகிறார். இவர், ஜேஇஇ (JEE) தேர்வ் எழுதுவதற்காக பாட்னாவிற்கு வந்த போது, இரண்டாம் தர புத்தகங்களை (second hand books) வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இரண்டு வாரங்களாக பாட்னாவின் வீதிகளில் ஏறி இறங்கியும், தனக்கு தேவையான புத்தகங்களின் இரண்டாம் தரத்தின் இருப்பு குறைவாக இருந்ததால் அவை கிடைக்காமல் மிகவும் சிரமபட்டிருக்கிறார். 

இதனால், எவ்வளவோ போராடியும் இவரால் ஐஐடி நுழைவு தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது. 2021ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை முயற்சி செய்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த இவர், தான் சுய  தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். கூடவே வேறு ஒரு கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பையும் தொடர்ந்தார். 

தன்னை போல, இரண்டாம் தர புத்தகங்கள் கிடைக்காமல் பல மாணவர்கள் சிரமப்படுவதை பார்த்த அக்‌ஷய், இவர்களை போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அவர் தனது நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்த தொழில்தான், கிதாப்வாலா (Kitabwalla). இதற்கு தமிழில் ‘புத்தக காரன்’ என்பதுதான். 

லட்சங்களில் வருமானம்..

அக்‌ஷய், தனது நண்பர் ஸ்ரீராஜனுடன் கிதாப்வாலா எனும் இணையதளத்தை, 2022ஆம் ஆண்டில் தொடங்கினார். தேர்வுக்கான புத்தகங்கள் மட்டுமன்றி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களையும் தங்களது தளத்தில் விற்கும் இவர்கள், இதுவரை 2 வருடங்களில் 6000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை விற்றுள்ளனர். இந்த விற்பனைகளில் இருந்து மட்டும் இவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கிறது. அக்ஷய்க்கும் அவரது நண்பர் ஸ்ரீராஜனுக்கும் 21 வயதுதான் ஆகிறது.

இவர்களின் இந்த முன்னெடுப்புகளை பார்த்த பீகார் அரசாங்கம், அம்மாநிலத்தின் ஸ்டார்ட் அப் பாலிசியின் படி இவர்களின் தாெழிலை வளர்க்க நிதி உதவிகளை வழங்கியிருக்கிறது.

மேலும் படிக்க | சிறு சேமிப்பை அப்படியே டபுள் ஆக்குவது எப்படி? சில ஸ்மார்ட் திட்டங்கள் இதோ..

குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்..

ஜேஇஇ தேர்வுகளில் இரண்டு முறையும் தன்னால் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததை அடுத்து, இது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த இவர், தனது நண்பன் ஸ்ரீராஜனுடன் சேர்ந்து கையில் ரூ.800ஐ வைத்துக்கொண்டு இத்தொழிலை ஆரம்பித்திருக்கிறார். அந்த பணத்தில் சில இரண்டாம் தர புத்தகங்களை வாங்கிய இவர், கிதாப்வாலா எனும் பெயரில் இணையதளம் தொடங்கியதோடு அதற்கான சமூக வலைதள பக்கங்களையும் ஆரம்பித்திருக்கிறார். 

இரண்டாம் தர புத்தகங்களை விற்கும் கடைகளை விட, காயலான் கடைகளில் இருந்து புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை பார்த்த இவர்கள், அங்கிருந்தே தங்களின் தொழிலுக்கான புத்தகங்களை வெயிட் அடிப்படையில் வாங்கியிருக்கின்றனர். பின்னர், தங்களுக்கான நெட்வர்கை உருவாக்கி அதன் மூலம் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். 

இவர்களிடம் இருந்து, இந்திய அளவில் தினசரி 200ல் இருந்து 250 வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாங்குகின்றனராம். இவர்களின் ஆர்டர் மதிப்பு, குறைந்தது ரூ.1000 ஆக இருப்பதாக அக்‌ஷய் தெரிவிக்கிறார். இன்னும் சில நாட்களில் எழுதுபொருள் பொருட்கள் (Stationery Items), ஆடியாே புத்தகங்கள், பள்ளி சீருடைகள் உள்ளிட்டவற்றையும் சரியான விலையில் விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

உங்களிடமும் பழைய புத்தகங்கள் இருந்தால், இவர்களின் ஐடியாவை ஃபாலோ செய்து, அதை குறைந்த விலையில் விற்று, நல்ல லாபம் பார்க்கலாம். 

மேலும் படிக்க | குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News