மக்களுக்கு அதிர்ச்சி செய்தி, கேஸ் விலையில் அரசு எடுத்த முக்கிய முடிவு
Gas Cylinder Price Today: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளன. அதன்படி இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டி இருக்கும்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலைகள் குறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெரிய முடிவை எடுத்துள்ளன. அதன்படி இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் எல்பிஜி சிலிண்டருக்கான தள்ளுபடியை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் எல்பிஜி புக்கிங் செய்வதற்கு கூடுதாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
முடிவுக்கு வந்தது தள்ளுபடி
அரசு எண்ணெய் நிறுவனங்கள் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்து வந்த நிலையில், தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக விநியோகஸ்தர்கள் புகார்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
அரசு எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய உத்தரவு
இது குறித்து தகவல் அளித்த நாட்டின் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல், இனி வணிக கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வசதி கிடைக்காது என விநியோகஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவானது கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 19 கிலோ மற்றும் 47.5 கிலோ சிலிண்டர்கள் தள்ளுபடியின்றி விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 19 கிலோ, 35 கிலோ, 47.5 கிலோ மற்றும் 425 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் மீதான அனைத்து தள்ளுபடிகளும் ரத்து செய்யப்படுவதாக இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் பெற மிஸ்டு கால் வசதி
இதனிடையே நீங்கள் மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெற விரும்பினால், முதலில் உங்கள் மொபைலில் 8454955555 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதும், எல்பிஜி இணைப்பு உங்கள் வீட்டிற்கு வந்து சேரும். இந்த 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்ததும், இந்தானில் இருந்து மெசேஜ் வரும். இப்போது நீங்கள் ஒரு இணைப்பைப் பெறுவீர்கள், நீங்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கேட்கப்படும்.
அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு, இந்த அனைத்து விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பகுதியின் விநியோகஸ்தர் உங்களைத் தொடர்புகொள்வார். செயல்முறைக்குப் பிறகு, உங்கள் சொந்த கேஸ் சிலிண்டர் தொடர்பான சேவையை வீட்டிலேயே பெறுவீர்கள்.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ